ATM Tamil Romantic Novels

தொடர் கதை

IMG-20240521-WA0048

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 20

வானவில் 20     ‘அவன் கண்களைப் பார்த்து எப்படி இல்லை என்று மறுக்க முடியும்? மனது முழுக்க அவன் மட்டுமே இருக்க..’ என்று எண்ணியவள், அடுத்த நொடி பாய்ந்து அவனை அணைத்து, அவள் இதயம் முட்டும் காதலை இதழ்களால் சொல்லி தீர்த்துக் கொண்டிருந்தாள் வர்ணா!!      வித விதமாய்!! அதி காதலை.. நனி நேசத்தை.. ஆழ் அன்பை.. இதழ்கள் கொண்டு வர்ணம் சேர்ந்தாள் அவன் முகம்தனில்!! வர்ணா!! அவனின் ப்ரியமான ப்ரியவர்ணா!!     […]

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 20 Read More »

என் மோகத் தீயே குளிராதே 18

அத்தியாயம் 18   “ப்ச்.. இந்த ட்ரெஸ்.. ஜிப்.. ப்ச்.. போட முடியலையே!” என்றவாறே தனது நீள கௌனின் ஜிப்பை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் விளானி. தனது‌ தோழி அர்ச்சனாவிற்கு போனில் அழைத்தவள்,   “என்னடி ட்ரெஸ்‌ வாங்கிருக்க? ஜிப்பைக் கூட இழுத்து விட முடியலை.. அவ்வளவு டைட்டாக இருக்கு..” என்று கூற,   “சாயங்காலம் வாங்கும் போது, சைரஸ் கரெக்ட்டா தானே இருந்துச்சு.. அதுக்குள்ள எப்படி பத்தாம போகும்? உண்மைய சொல்லு.. எனக்கு தெரியாம ஏதாவது

என் மோகத் தீயே குளிராதே 18 Read More »

என் மோகத் தீயே குளிராதே 17

அத்தியாயம் 17   காலையில் எழுந்தவள், வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்ய, அவள் ஏதோ கவர் கிடைக்க, அதனை எடுத்து பார்த்தவளுக்கு கோர்ட்டில் இருந்து வந்திருப்பது புரிந்தது.    ‘என்னைய டிவொர்ஸ் பண்ண, கோர்ட் வரைக்கும் போயிட்டீங்களா? நீங்க இவ்வளவு தூரம் என்னைய வெறுப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல..’ என்று மனதுக்குள் புலம்பியவள், அதனை எடுத்துக் கொண்டு, ஹரிஷான்தின் அறைக்குள் சென்றாள். அங்கே தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு, கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவனின் முன்னால்

என் மோகத் தீயே குளிராதே 17 Read More »

C8F8AE51-A096-448F-8A1D-DD9906DFCFE0

ஆடி அசைந்து வரும் தென்றல் – 10

10 – ஆடி அசைந்து வரும் தென்றல்

“ஆல் தி பெஸ்ட் தேவாக்குட்டி” என வாழ்த்தி விட்டு.. “இன்டர்வியூ முடிஞ்சதும் பத்திரமா வீட்டுக்கு ஆட்டோ பிடிச்சு போயிரு..” செலவுக்கு பணம் கொடுத்து விட்டு தான் .. தனது அலுவலகத்திற்கு கிளம்பினார்..

இண்டர்வியூ ஹாலில் உட்கார்ந்திருந்தவளுக்கு இதை எல்லாம் நினைக்க.. பக்குவமில்லா கோபம் அதிகமானது…

“வேலை கிடைச்சு சம்பளம் வாங்கியதும் போறோம் ரெண்டு பக்கட் பிரியாணி வாங்கறோம் அவங்க முன்னாடியே தின்னு வெறுப்பேத்துறோம்..” என கண்களை சுருக்கி… முகத்தை சுழித்தவாறே…விரல்களை மடக்கி குத்துசண்டை வீராங்கனை போல கைகளை உயர்த்தி பிரியாணி சபதம் வெறிகொண்டு எடுத்து முணு முணுக்க…

பக்கத்து இருக்கை பெண் அவளை பார்த்து பயந்து ஓடிப் போய் நான்கு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்து கொண்டது…

அப்போது தான் உள்ளே நுழைந்த அனிவர்த்தின் பார்வையில் இக்காட்சி விழ… பார்த்தும் ஒரு ரசனை தோன்ற… ஒரு லயிப்பு ஏற்பட… மெல்ல அவளை கடந்து சென்றான். அனிவர்த் வந்ததும் இண்டர்வியூ ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொருவராக உள்ளே வெளியே போய் வர, தேவர்ஷி ‘கடவுளே… இந்த வேலை கிடைச்சிடனும்.. இல்லைனா ஒவ்வொரு தடவையும் அவங்க முன்னால போய் நிக்கனும்… அந்த மாதிரி வராம காப்பாத்துங்க..’ என வேண்டி கொண்டு இருந்தாள். தேவர்ஷியும் அழைக்கப்பட… உணர்வுகளின் குவியலில் சிக்கிக்கிடந்தவள் நடுங்கிய படியே அனிவர்த் அறைக்குள் சென்றாள்.

சுந்தரனை பார்த்ததும் ஆ என வாய் பிளந்து நின்றாள்… எல்லாம் மாறிபோச்சு ..

அவள் எதிர்பார்த்து வந்தது படிப்பாளி.. அறிவாளி என காட்டிக் கொள்ளும் ஒரு சோடாபுட்டியாவோ… இல்லை ஒரு வழுக்கை மண்டையனோ…

இப்படி ஹாலிவுட் ஸ்டார் மாதிரி இருக்கானே!… ஆள அசரடிக்கறானே.. இவன் மேட் இன் இண்டியாவா.. இல்ல பாரின் மேடா… இல்லல்ல… கொஞ்சம் இந்திய சாயல் இருக்கே… ஒருவேளை இவன் இண்டியன் பாரின் கொலாப்ரேஷனா இருப்பானோ…. என்னா கலரு.. என்னா ஸ்டைலு… பிரம்மன் இவனை மன்மதனுக்கு போட்டியா படைச்சிட்டாரு போல… வேலைன்னு செஞ்சா இவன்கிட்டதான் செய்யனும்.. மனம் விளம்பர வசனம் பேச, இவனை சைட் அடிச்சுகிட்டே அசால்டா வேலை செஞ்சிடலாம்… என அவனை பராபட்சம் பாராமல் கதவருகே நின்று கொண்டு சைட் அடித்தாள்.

அனிவர்த்துக்கோ அவளைப் பார்க்க.. பார்க்க.. ஒரு சுவராஸ்யம் கூடியது. ஏற்கனவே இவளின் சேட்டையை பார்த்தவனாயிற்றே… இவனும் அவள் கண்கள் காட்டிய ஜாலங்களை ரசித்து கொண்டிருந்தான். அவனைப பாரத்ததும் அந்த நயனங்கள் ஆடிய நர்த்தனங்கள் அவனை ஈர்த்தது. அனிவர்த்தும் தன்னை மறந்து தான் லயிப்போடு மூழ்கியிருந்தான்.

சில பல நிமிடங்கள் இந்நிலை நீடித்ததோ… முதலில் அனிவர்த் தன்னிலையில் இருந்து மீட்டு் கொண்டவன்..

“மிஸ் தேவர்ஷி… கம் அண்ட் சிட்..” என்றான்.

அவனின் குரலில் தான் தன்னை மறந்து அவனை சைட் அடித்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து… தன் தலையில் லேசாக தட்டி..
‘ஐயோ இப்படியா சைட் அடிப்ப.. பக்கி.. இத மட்டும் அந்த கிழவனார் பார்த்திருந்தா கன்பார்மா உனக்கு ஹவுஸ அரெஸ்ட் தான்டி தேவா..’

“மிஸ் தேவர்ஷி.. ஆர் யூ ஓகே…”

“ஹி ஹி..” என அசட்டு சிரிப்புடன் வந்து உட்கார்ந்தாள்.

அவள் உட்காரந்ததும் அனிவர்த் ஸ்டைலாக கை நீட்ட.. என்ன என புரியாமல் முழிக்க.. அவள் முழுதாக தெளியாததால் ஒன்றும் புரியவில்லை..

அவனை பார்த்ததிலேயே கொஞ்சம் கிறுகிறுப்பு ஏறியிருக்க.. இப்படி ஒரு இடத்தில் வேலைக்காக வருவது இது தான் முதல் தடவை என்பதால் என்ன எப்படி என ஒன்றும் தெரியாமல்.. அவன் நீட்டிய கைக்குள் தன் கையை வைத்தாள்…

அனிவர்த் வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கினான். கிடைத்த வாய்ப்பை விடாமல் அவளின் கையை தன் கைக்குள் பொதிந்து .. ஆழ கண்ணோடு கண் நோக்க… அதில் தேவர்ஷி உடல் சிலிர்க்க.. தன் இன்னொரு கையை அனிவர்த் நீட்ட.. மான் விழி மருண்டு உருவிக் கொண்டவள் சித்தம் பிழன்று .. மிரள..

“பைல்.. பைல்..” உதட்டோரம் சுழிப்பு சிரிப்புடன் கந்தர்வன் எடுத்து கொடுக்க..

‘அச்சோ! தேவா! மானத்த வாங்கறியே..’ என தன்னை திட்டியவாறே.. நுனி நாக்கு கடித்து பைலை நீட்டினாள்.

வாங்கி பார்த்தவன் டிஸ்டிங்க்சன் மாணவி என்று அது கட்டியம் கூற .. ம்ம்ம் அழகோடு அறிவும் இருக்கு ஆனால் அனுபவமில்லை … புரிந்து சில தொழில் முறை கேள்விகள் கேட்டவன்… அவள் பதிலில் திருப்தியாகி..

“ம்ம்.. ஓகே.. மெயில் வரும்..” என பைலை நீட்டினான். அவள் வாங்கி விட்டு.. கொஞ்சம் கூட பயமில்லாது அவனை முழுசா விழுங்கும் பார்வை ஒன்று பார்த்துட்டு வெளியேற..
அவள் ஒயில் பார்வையில் அனிவர்த்துக்கு சிரிப்பு வந்தது…

’ஆளப் பாரு.. சேட்டைய பாரு’ என…

அதற்கு பிறகு வந்திருந்த அத்தனை பேரையும் பார்த்து அனுப்பியவனுக்கு தேவர்ஷியே மனதில் நின்றாள்..

இளமை அழகு படிப்பு என்ன ட்ரைனிங் கொடுத்தால் போச்சு என்று ஏனோ அவன் மனம் தேவர்ஷிக்கே முன்னுரிமை கொடுத்தது.

மானேஜருக்கு அழைத்து தேவர்ஷிக்கு மெயில் அனுப்ப சொல்லியவன்.. அவளின் ரெஸ்யூமை எடுத்து அதிலிருந்த போட்டோவை தன் பெருவிரலால் தடவியவாறே பார்த்திருந்தான். ஏன் பார்கிறோம்… எதற்கு பார்க்கிறோம் என தெரியாமலே பார்த்திருந்தான்.

தேவர்ஷிக்கு ஒரு வாரத்தில் வேலையில் வந்து சேருமாறு மெயில் வந்திருக்க… சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒரே ஆர்ப்பாட்டம் தான்..

நாங்களாம் யாராம்??!! என்று ஒரே அலப்பறை..

யார் காதையும் சும்மா விடவில்லை.. என் அருமை என்ன? பெருமை என்ன? அதிர்ஷ்டம் என்ன? இப்படி உயர்வு நவிற்சி அணியிலேயே சுய பெருமை பேசி பேசி ஆர்ப்பாட்டம்..

அவள் வாழ்நாளிலேயே இன்றே பொன் நாள் மகிழ்ச்சி கடலில் தத்தளிதாள்..

அறியாமைகளில் கிடைக்கும் மகிழ்ச்சி தெய்வீகம் ..

மாலை கம்பெனியில் இருந்த வந்த திருகுமரனிடம்..

“ப்பா.. நான் செலக்டாயிட்டேன் ப்பா…” குதியாட்டம்

“எனக்கு தெரியும்டா என் தேவாக்குட்டி அறிவுக்கு உடனே வேல கிடைச்சிடும்னு..”

“அது தான்பா… எனக்கும் டவுட்டா இருக்கு.. இவ அறிவுக்கு எப்படி வேல கொடுத்தாங்க..” என தேவர்ஷி தம்பி பிரவீன் கலாய்க்க…

அப்போது அங்கு வந்த திருக்குமரனின் தம்பி கண்ணனின் மகன் ராகுலும் பிரவீனோடு சேர்ந்து கொண்டு…

“அப்படி சொல்லுடா.. இவளுக்கு எல்லாம் வேல கொடுத்திருக்கானே அந்த கம்பெனியோட நிலமை இனி என்னாகுமோ?.. நினைச்சாலே ஐயோ பாவம்..”

“ப்பா பாருங்கப்பா.. இந்த தடியன்கள..” தகப்பனிடம் சலுகையாக சாய்ந்து கொண்டு புகார் கொடுக்க.

“டேய் சும்மா இருங்கடா… பாப்பாவையும் நம்பி ஒருத்தன் வேல கொடுத்திருக்கான்.. அத பாராட்டாம.. இப்படி கலாய்பீங்களா?..”திருகுமரனும் வெடிச்சிரிப்போடு அவர்களோடு இணைந்து கொள்ள..

“ப்பா.. நீங்களுமா.. போங்க.. உங்ககூட பேசமாட்டேன்..கா க்கா” தேவா ஊட

தன்னருகே அமர்ந்திருந்த மகளை லேசாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

வேலைக்கு செல்வதற்குள் வீட்டில் உள்ளவர்களை ஒரு வழியாக்கினாள். புதிதாக நிறைய ஆடைகள் அதற்கேற்றாற் போல அஸஸரிஸ் வாங்கினாள்…

பார்லருக்கு சென்றாள். ஏற்கனவே இவளுக்கு என ஒரு வண்டி இருக்க… புதிதாக ஒன்று வேண்டும் என கேட்க… திருக்குமரன் மகளின் விருப்பத்திற்காக வாங்கி கொடுத்தார்.

பிரவீன் தான்…

”இவ வேலைக்கு போறதுக்குள் அப்பா சொத்தை காலிபண்ணிடுவாபோல..” என கிண்டல்அடிக்க.. அவனை துரத்தி துரத்தி அடித்தாள்.

முதல் நாள் தனது புது வண்டியில் ஆர்ப்பாட்ட்மாக அலுவலகத்துக்கு சென்று..
மானேஜரிடம் ரிப்போர்ட் செய்து என்ன… எப்படி வேலை என தெரிந்து கொண்டவள்… மானேஜர் சொன்னது போல் அனிவர்த்தை பார்க்க அவனது அறைக்கு வந்தாள்.

கதவை லேசாக தட்டி.. “மே ஐ கம் இன் சார்..” தேவர்ஷா அனுமதி கேட்க…

அனிவர்த்தும் அன்று அலுவலகத்துக்கு சற்று முன்னதாகவே வந்திருந்தான். ஆனால் அவன் இன்று தேவர்ஷி வருவது எல்லாம் நினைவில்லை. தேவர்ஷியையே மறந்திருந்தான். அவள் குறும்புகளால் ஒரு இரண்டு நாள் அவன் நினைவிலிருந்தாள். பிறகு மெல்ல.. மெல்ல.. மறந்தும் போனான்.

தனது அறைக்கு வெளியே இருந்த கேமரா மூலம் தன் முன் இருந்த திரையில் தெரிந்த அவளை பார்த்தவன் அப்போது தான் நினைவு வர உற்சாகமாக…

“எஸ்..” என்றான்.

உள்ளே வந்தவளை பார்த்து அசந்து போனான்… அன்று அவளது சேட்டைகளை ரசித்தானே.. அவளின் தோற்றத்தை அவ்வளாக கவனிக்கவில்லை. தலை முதல் பாதம் வரை பொறுமையாக ரசித்து பார்த்தான்.

பாலில் சில சொட்டு செஞ்சாந்தை கலந்தது போன்ற நிறம்..

‘ப்பா… பிங்கியா இருக்கா…’

அடர்த்தியான சுருள் சுருளான கேசம் அழகாக கிளிப் போட்டு அடக்கி வைத்திருக்க.. அப்படி இருந்தும் ஒன்றிரண்டு அடங்காமல் அவள் நெற்றியிலும் காதோரங்களிலும் புரள..

‘கேர்லி ஹேர்.. இவளை மாதிரியே.. அடங்காது போல..’

நீண்ட கண்கள்.. கூர்நாசி.. ரொம்பவே சின்ன உதடுகள்.. சற்று ஒல்லியான உடல்வாகு…சராசரியான உயரம்.. அவன் கண்களுக்கு குட்டி பொண்ணாக தெரிந்தாள்.

ப்ளஸ்டு கேர்ள் மாதிரி இருக்காளே.. கொஞ்சம் வித்தியாசமா ஹோம்லி லுக்ல நல்லா தான் இருக்கா… இந்த லுக் கூட அழகா தான் இருக்கு..

“குட்மார்னிங் சார்..”

“ம்ம் சொல்லுங்க தேவர்ஷி.. ஆர் யூ ஹாப்பி…”

“எஸ் சார்..”

“ஓகே.. ஒர்க்ல சின்சீயரா இருக்கனும்.. ஒர்க் பர்ஸ்ட்.. மற்றது எல்லாம் அப்புறம் தான். காட் இட்..” என்றான் அனிவர்த் கண்டிப்புடன்…

“ம்ம்ம் ஓகே சார்” என தலையை நன்றாக ஆட்டினாள்.

லேசாக சிரிப்பு வந்துவிட.. “போய் வேலையை பாருங்க..” என

அதற்கும் தலையை ஆட்டி விட்டு சென்றாள். சின்ன பொண்ணு என சொல்லி சிரித்தான்.

சின்ன பொண்ணு என்ற அவன் நினைத்தது சரி என்பது போலவே அவள் செய்த செயல்களும்.. சேட்டைகளும் இருந்தன. அவன் எந்த அளவுக்கு டென்ஷன் ஆனானோ.. அந்த அளவுக்கு ரசிக்கவும் செய்தான்.. தினமும் அவளை ஸ்கேன் செய்வதே அவன் வேலையாகி போனதை வசதியாய் மறந்தான்.. அந்த ஆறரை அடி ஆணழகன்

தினமும் காலையில் அனிவர்த்தை பார்த்து காலை வணக்கம் சொல்லவதை வழக்கமாக வைத்திருந்தாள். அவன் வந்ததும் அவன் அறைக்கு சிட்டுகுருவியாக துள்ளி கொண்டு வருபவள்.. உற்சாகமாக..

“குட்மார்னிங் சார்..” மலர்ச்சியுடன்.. கிள்ளையாக மொழிவாள்.

அவள் மலர்ச்சி அவனையும் தொற்றிக் கொள்ளும். முகத்தில் எப்போதும் மின்னல் கீற்றாக… பனித்துளி அளவு புன்னகை ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.அவள் பேசுகையில் அவளின் மீன் விழிகள் அவள் உதட்டசைவிற்கு சுதி சேர்க்கும்.

அனிவர்த் கண்களுக்கு தேவர்ஷி வித்தியாசமாக.. அவன் கண்ட பெண்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு.. அவன் கவனத்தை ஈர்த்தாள். அவள் கேபினில் இருந்த கேமரா வழியாக அவளை கவனிக்க தொடங்கினான். ஒழுங்காக வேலை செய்கிறார்களா.. என எல்லோரையும் கவனிப்பது தான். இன்னும் கொஞ்சம் கூடுதலாக தேவர்ஷியை அவளின் சிறுபிள்ளைத்தனத்திற்காக கவனித்தான்.

சுழல் நாற்காலியில் லேசாக ஆடிக் கொண்டு தான் வேலை செய்வாள். ‘கால்கள் ஒரு இடத்தில் பாவாது போல..’ என மெல்லிசான சிரிப்போடு பார்த்திருந்தான்.

தேவர்ஷி எப்பவும் சுடி தான்.. நல்ல தரம் உயர்ந்த காட்டன் சுடி… மடிப்பு எடுத்தோ.. பின் குத்தியோ.. எல்லாம் துப்பட்டா இருக்காது. அலட்சியமாக அவள் தோளில் புரண்டு கொண்டு இருக்கும். அது சரிந்து வரும் போது அப்படியே நாசுக்காக தூக்கி போட்டுக் கொள்ளும் பாங்கு… அனிவர்த்தின் ரசனைக்கு இடமானது.

மதிய உணவை வீட்டில் இருந்தே கொண்டு வரும் தேவர்ஷி அங்கு அலுவலகத்தை சுத்தம் செய்யும் ஆயாம்மாவிற்கு பாதி உணவை கொடுத்து விட்டு உண்பதை கண்டவனுக்கு.. கோபம் கொள்ள செய்தது.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 10 Read More »

7d1f69a0-24d8-46c4-9b2e-1c59dc7ea7f8

ஏகாந்த இரவில் வா தேவதா! – 12 & 13 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்.. வா தேவதா [12] சுமார் இற்றையிலிருந்து இருநூறு வருடங்களுக்கு முன்னர்.. இப்போதிருப்பதையும் விட வெகு அழகாக இருந்தது ‘கண்டி சமஸ்தானம்’.  நாடுபிடிக்க வந்த வெள்ளையனுக்கு நாட்டின் இதர பிரதேசங்களை விடவும் மத்தியிலுள்ள குறிஞ்சி நில எழில் சொட்டும்.. கண்டி பிடித்துப் போனதுக்கு காரணமே அதன் நிறைவான அழகே.  வானெங்கிலும் புகைமண்டலம் எழுந்து கிளம்பினாற் போன்று.. வெண்பஞ்சு மேகங்கள் பவனி வந்து கொண்டிருக்க, அற்றைக்கும் எற்றைக்கும் யௌவனம் குன்றாத நிலவும்.. தன் பால் வண்ண ஒளியை..

ஏகாந்த இரவில் வா தேவதா! – 12 & 13 (விஷ்ணுப்ரியா) Read More »

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 19

வானவில் 19       நேற்று கோவிலில் அவர்களின் நெருக்கத்தையும் வர்ணா கோபமாக பேச.. அவன் சிரிப்போடு தலையாட்டுவதையும் பார்த்த அசிதனுக்கு இவர்களின் இடையே உள்ள நெருக்கம் புரிந்தது. அதிலும் காரை இவனே தான் பஞ்சராகி அவளை அழைத்து சென்றான் என்றதும்.. பஞ்சர் பார்த்த மெக்கானிக் மூலம் தெள்ளத் தெளிவாக விளங்க..      மாமன் மகளை தேடி பிடித்து அவளின் வேலை பற்றி பேசுவது போல ஒன்றிரண்டு வார்த்தைகளை விட்டு மொத்தமும் அவளிடம் விஷயத்தை

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 19 Read More »

என் மோகத் தீயே குளிராதே 16

அத்தியாயம் 16   “வாவ்.. எவ்ளோ பெரிய ஆஃபிஸ்?”   “நீ இங்கேயே இறங்கிக்கோ..”   “ஏன்.. ரோட்டுல இறங்க சொல்ற? ஆஃபிஸ்குள்ள போய் நிற்பாட்ட மாட்டியா?”   “நீ இப்ப இன்ட்ரமா தான் சேர்ந்திருக்க.. அதாவது இடைகால ஊழியர்.. உன்னோட எக்ஸம்காக வேலைக்கு சேர்ந்திருக்க புரியுதா?”   “சோ? வாட்? டெம்ப்ரவரியா வேலைக்கு சேர்ந்தா.. டெம்ப்ரவரியா நட்டாத்துல விட்டுட்டு போவியா?”   “என்னது நட்டாத்துலயா? என்ன லாங்குவேஜ் இது? நேத்து என்னன்னா ரீல்ஸ் போடுறேன்னு ஒட்டு

என் மோகத் தீயே குளிராதே 16 Read More »

IMG-20240518-WA0022

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 18

 வானவில் 18     “அப்புறம் என்ன இதுக்கு அவளை தூக்கி வைத்திருந்த டா?” என்று தன் சட்டையை பிடித்து கேட்கும் அசிதனை அதிர்ச்சியோடு பார்த்தான் விநாயக்.     ‘எப்படி தெரியும்?’ என்ற‌ கேள்வி தொக்கி நின்றது விநாயக் கண்களில்..     “சொல்லு? சொல்லுடா? ஏன் அவளை தூக்கின? இப்போ எதுக்கு இங்க அவளை தேடி வந்த?” என்றவன் அடுத்த அவனின் கன்னத்தை தன் முஷ்டி கொண்டு பதம் பார்க்க..     அதை

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 18 Read More »

7d1f69a0-24d8-46c4-9b2e-1c59dc7ea7f8

ஏகாந்த இரவில் வா தேவதா! – 10 & 11 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [10] மரம் வீழப் போன யௌவனாவும் சரி, அவளைக் காப்பாற்ற தன் இன்னுயிரை துச்சமாகத் துறந்து.. தன் உள்ளங்கவர்ந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வீரமாக செயற்பட்ட சத்யாதித்தனும் சரி.. அந்த அகோர நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்க,  அதன் தாக்கத்திலிருந்து மீளவே முடியாமல் நின்றிருந்தது என்னவோ வசுந்தரா தேவியம்மாளே தான்.  பெற்ற மனம் அல்லவா?  மகன்.. தன் இதயம் கவர்ந்த பெண்ணின் உயிர் காக்க.. இடையிட்ட கணம்.. அவன்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 10 & 11 (விஷ்ணுப்ரியா) Read More »

7d1f69a0-24d8-46c4-9b2e-1c59dc7ea7f8

ஏகாந்த இரவில் வா தேவதா! – 7,8 & 9 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா!!  [7] அடுத்தநாள் காலை,  தன்னையொரு பிரேதாத்மா.. இருநூறு வருஷங்களாக நெஞ்சில் சுமந்திருந்த பழிவெறியுடன்.. உயிரைக் காவு கொள்ள வந்ததையும்,  தன் வம்சத்துக்கென்றே உரித்தான காவல் அடிமையின் ஆத்மா அவனைக் காத்ததையும்.. கூட அறியாமல்… இரவில் அவள் பற்றிய கற்பனைகளுடனேயே துயின்று எழுந்திருந்த இராஜகுல சத்யனுக்கு.. காலை நற்காலையாகவே அமைந்திருந்தது.  எப்போதும் இந்தியாவின் தலைநகரான தில்லியில்.. காலை புலர்ந்ததும்.. இயந்திரத்தனமாக எழுந்து.. வாகனங்களின் புகைக்கும் , தூசுதும்பட்டைகளுக்கும் மத்தியில்தன் அலுவலகம் செல்பவனுக்கு,  குறிஞ்சி

ஏகாந்த இரவில் வா தேவதா! – 7,8 & 9 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top