ATM Tamil Romantic Novels

தொடர் கதை

3 ஜில்லுன்னு ஒரு விவகாரத்து

3 ஜில்லு   மாயமில்லை மந்திரமில்லை.    இதயம் ஒரு நிமிஷம் நின்றதும் உண்மை . அப்புறம் லேசா துடிச்சி துடிச்சி பழைய லயத்துக்கு வந்ததும் உண்மை.   வாசலில் சிலையாய் நின்றவளை முதலில் கண்டதும் நாயகன் தான்.      ஹு ஆர் யூ? ஆண்மை ததும்பிய குரலில் அதட்டியதும் அவன் தான்.   காலக்கொடுமை! கேளு! கேளு! நல்லா கேளு!   அறையிலிருந்த அத்தனை பேரின் கண்களும் இவளையே நோக்க, லஜ்ஜையா போச்சு லியாவுக்கு. […]

3 ஜில்லுன்னு ஒரு விவகாரத்து Read More »

0618CB9A-441D-4453-8FDA-6D85617BBC5D

புள்ளி மேவாத மான் – 23

23 – புள்ளி மேவாத மான்

எழில் சமாதானம் ஆகி சமரசம் கொண்டு சரசம் ஆடிய பின்பு மேற்கொண்டு இரண்டு நாட்கள் சென்றிருந்தது. அந்த இரண்டு நாளும் அவ்வப்போது எழிலின் முகத்தையே சில நிமிடங்கள் விடாது பார்ப்பான். என்னவென்று எழில் கேட்டால் ஒன்றுமில்லை என தலை அசைத்துவிடுவான்.
அவன் விழிப் பார்வையில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.முதலில் எழிலுக்கு அந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை. சற்று யோசித்து பார்த்தப் பொழுது அந்த பார்வை தன்னிடம் எதையோ கேட்கிறது இல்லை எதிர்பார்க்கிறது என புரிந்து கொண்டாள்.
அன்று இரவில் தங்கள் அறையில் இருந்த பொழுதும் அதே பார்வை. தனாவை கேட்க மழுப்பலாக பதில் சொல்ல… விடாது இழுத்து வைத்து கேட்டாள் எழில்.
“மாமா.. எதுக்கு இப்படி பார்க்கறிங்க…”
“ஒன்னுமில்லை நீ தூங்கு”
“இப்ப சொல்லப் போறிங்களா.. இல்லையா..”
“ம்கூம்.. சொல்லமாட்டேன். நீயே கண்டுபிடி”
“எங்கிட்ட ஏதோ எதிர்பார்க்கறிங்க..கேட்காமேயே அத நான் செய்யனும்னு நினைக்கறிங்க..”
எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்திருக்க…
“அப்படி தானா… ஆனா என்னன்னு தெரியலையே..”அழகாக உதடு பிதுக்கினாள்.
அவள் பாவனையில் இவன் சொக்கி தான் போனான். அவளை காதலோடு பார்க்க…
“என்ன்னு சொல்லுங்க மாமா..எனக்கு தெரியல.. மண்டயே வெடிச்சிடும் போல இருக்கு.. ப்ளீ…ஸ்..”என அவன் தாடையை பிடித்து கொஞ்சலாக கெஞ்சினாள்.
அள்ளி அணைத்திட துடித்த கைகளை கடினப்பட்டு கட்டுப்படுத்தினான்.அவள் கொஞ்சல் மொழியில் மனம் இரங்கி தன் வலக்கை நீட்டி தா என்பது போல பார்த்தான்.
என்ன தரனும் என புரியாமல் “என்ன மாமா..என்ன தரனும்” முழித்தாள் சிறு குழந்தையாக…
அவள் செய்கை எல்லாம் அவனை பித்தனாக்கியது. அவளை ஆண்டு விட துடித்த உணர்வுகளை அடக்கி வைத்தான். அவளிடம் தனக்கு வேண்டியதை பெற்ற பிறகே மற்றது எல்லாம் என அவளை தீர்க்கமாக பார்த்தவாறே..
“என் கிப்ட் எல்லாம் கொடுடி”என்றான் அவள் முன் கையை நீட்டினான்.
“மா..மா..”என்றாள் அவனை ஆச்சரியமாக பார்த்தபடி..
எல்லாம் எனக்கு தெரியும் என்பதாக லேசாக தலை அசைத்து இமைமூடி திறந்தான்.
மாமாவுக்கு தெரிந்திருக்கா… தன் காதலை சொல்லாமல் தனக்குள்ளேயே பொத்தி வைத்திருக்க.. அந்த காதல் சொல்லாமலேயே தன் மாமனுக்கு தெரிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு இருந்தவளுக்கு தன் காதல் பரிசுகளும் சொல்லாமலேயே தெரிந்ததில்..லேசாக கண் கலங்க.. அதை துடைக்க கூட மறந்தவளாக.. சென்று தன் அலமாரியில் வைத்திருந்த சற்றே பெரியதான அலங்கார மரப்பெட்டியை தூக்கி கொண்டு வந்தாள்.
வேகமாக சென்று அவளிடம் இருந்து வாங்கி வந்து படுக்கையில் வைத்தான்.
அதன் சிறு பூட்டை சாவி கொண்டு திறந்தாள். அந்த பெட்டி பரிசுப் பொருட்களாலும் வாழ்த்து அட்டைகளாலும் நிரப்பப்பட்டு இருந்தது.
ஒரு வாழ்த்து அட்டையை எடுத்து”இது தான் நான் உங்களுக்கு பர்ஸ்ட் பர்ஸ்ட் வாங்கின பர்த்டே கார்டு. நீங்க காலேஜ் போய் ஒரு வருசம் கழிச்சு வந்திங்கல்ல.. அதுக்கப்புறம் வந்த உங்க பர்த்டேவுக்கு நான் வாங்கினது. கொடுக்க தைரியமில்லா வச்சுகிட்டேன்.”
அந்த கார்டை வாங்கி பார்த்தான். அதில் உள்ளே ‘ஹாப்பி பர்த்டே மாமா” என எழிதியிருந்தது. அதை தவிர அதில் ஒன்றும் பெரிதாக இல்லை.

ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் அவள் கொடுக்காமல் வைத்திருந்தில் ஒன்றில் அழகான இதயம்.. மற்றொன்றில் கொஞ்சி கொள்ளும் லவ்பேர்ட்ஸ்.. இன்னொன்றில் அவளுடைய உதடும் பக்கத்தில் அவன் மீசையும் என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக வரைந்திருந்தாள். பத்து வருட காதலில் பத்து பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள்.
சில காதலர் தின வாழ்த்து அட்டைகளும் அவன் கையில் இருந்தன.அதை பிரித்து படித்தவனால் சத்தியமாக அவனால் நார்மலாக இருக்க. முடியவில்லை. எதையோ இழந்து விட்டதாகவும்…ஏதோ கிடைத்தற்கரிய பொக்கிஷம் கிடைத்தது போலவும் இரு வேறு உணர்வுகளுக்கு ஆட் கொண்டான்.

காதல் பேதை என்னை
ஒரு மையல் பார்வை
பாரடா என் காதல் தேவா
அந்த பார்வை போதும்
என் காதல் வாழ…
அந்த காதலை உயிராக
கொண்டு நான் வாழ்ந்திடுவேன்.

என ஒரு வாழ்த்து அட்டையில்..

இன்னொன்றில்….

உன் மீசையும்
அதில் மறைந்திருக்கும்
உன் உதட்டில் பளீரிடும்
உன் வெண் சிரிப்பும்
எனை பித்து கொள்ள செய்கிறதடா…

இப்படி சில கவிதைகளும் இருந்தன.
அதை எல்லாம் பார்க்க.. பார்க்க.. அவனை பேச்சற்ற மௌனமே ஆட்சி செய்தது.
ஒவ்வொரு பரிசு பொருளாக கையில் கொடுக்க ஆரம்பித்தாள்.

“உங்களை நான் லவ் பண்றேனு தெரிஞ்ச அந்த வருடம் நான் ஸ்கூல் டூர் கேரளா போயிருந்த போது உங்களுக்காக நான் வாங்கியது”என அவன் கைகளில் வைத்தாள் சந்தன மரத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு பேனா.
“இது நான் அத்தை கூட உங்க பர்த்டேவுக்கு டிரஸ் எடுக்க போன போது பார்த்தேனா.. பிடிச்சிருந்தது. யாருக்கும் தெரியாம அடுத்த நாள் ஸ்கூல் இருந்து போய் வாங்கிட்டு வந்தேன்” என கொடுத்தாள் சாண்டில் கலர் சட்டை ஒன்று.
“குவாலியர்ல ரொம்ப குளிரும்னு அத்தை சொன்னாங்களா.. அதான் ஒரு ஸ்வெட்டர் வாங்கினேன். ப்ப்ச் கொடுக்க தான் இல்லை” என்றாள் ஒரு ஸ்வெட்டரை எடுத்து..
“நீங்க காலேஜ்ல கோல்டு மெடல் வாங்கினதுக்காக ஏதாவது கொடுக்கனும்னு தோனுச்சா.. கோல்டு மெடல்ங்கற போது.. பெரிசா ஒர்த்தா கொடுக்கனுமில்ல..அதான் ஏதாவது தங்கத்தில கொடுக்கலாம்னு யோசிச்சு என் தோட்டை வித்து இதை வாங்கினேன்”என ஒரு மோதிரத்தை கொடுத்தாள்.
அவள் கண்களில் காதல் மின்ன.. மின்ன.. ஒவ்வொன்றாக சொல்லி எடுத்து கொடுக்க தன்னை மறந்து அவளிடமே லயித்து இருந்தவன்.
“அடிப்பாவி தோட்டை வித்துட்டயா..உங்க வீட்ல ஒன்னும் கேட்கலையா..”
“கேட்டாங்க.. கேட்டாங்க.. கேட்காம இருப்பாங்களா.. அதான் யோசிச்சு முன்னாடியே ஒரு பிளான் பண்ணிருந்தேன்”
“என்னாது அது”
“ஸ்கூல் விட்டு வரும் போது யாரும் இல்லாத ரோட்ல சைக்கிளை மறிச்சு கத்திய காட்டி ஒரு திருடன் கேட்டான். பயத்துல கழட்டி கொடுத்துட்டேனு சொல்லிட்டேன் ஐயோ பாவம் புள்ளனு விட்டுட்டாங்க ” என்றாள் கண்களை சிமிட்டி..
“அடிப்பாவி.. நீ பெரிய கேடியா இருப்ப போல இருக்கே..” என வாய் மேல் கை வைத்து கொண்டான் தனா.
அடுத்தடுத்த சில பொருட்களை கையில் கொடுத்து “நீங்க பூங்கொடிக்காவ லவ் பண்ணறிங்கனு தெரிஞ்சும் இதெல்லாம் வேஸ்ட் இனி வாங்க வேணாம்னு தான் நினைச்சேன். ஆனால் என்னால உங்கள மறந்து உங்களுக்கு வாங்காம இருக்க முடியல.. அதான் என் காதல் எங்கும் தோற்காது என என்னோடவே பொத்தி பொக்கிஷமா வச்சுகிட்டேன்” என்றாள். சொல்லும் போதே கண்களில் சிறுவலி வந்து போனது.
அவளின் காதலில் மிரண்டு தான் போனான் தனா. அவளை தாவி அணைத்து கொண்டான். அவள் காதல் உன்னதத்தை புரிந்து கொள்ளாமல் தான் செய்த மடத்தனத்தை நினைத்து இப்போதும் தன்னையே திட்டிக் கொண்டான் மனதோடு..
அந்த பொருட்களை எல்லாம் பெட்டியில் அடுக்கி எடுத்து கொண்டு போய் தன் அலமாரியில் வைத்து விட்டு வந்தான்.
படுக்கையில் அவளருகே வந்து அவள் மடியில் தலை வைத்து படுத்து அவள் வயிற்றில் முகம் புதைத்து இடுப்பை கட்டிக் கொண்டான்.
எதுவும் பேசாமல் எழிலும் தலை கோதி கொடுக்க..சிறிது நேரத்தில் தன் சேலையில் ஈரம் உணர்ந்தவள்பதறி போய் தனாவின் முகத்தை திருப்ப முயற்சிக்க.. பிடிவாதமாக முகம் திருப்ப மறுக்க..
“என்னாச்ச மாமா.. ஏன் அழுகறிங்க.”
“உன் காதலுக்கு நான் தகுதியானவனே இல்லை தான”
“ஐயோ.. மாமா.. ஏன் அப்படி நினைக்கறிங்க..முதல்லயே என் காதலை நான் உங்கிட்ட சொல்லியிருந்தா.. நீங்க என்னைய தான லவ் பண்ணியிருப்பிங்க.. சொல்லாத காதலுக்கு ஏது மாமா மதிப்பு” என்றாள் ஏக்கத்தோடு..
உடனே வாயை பொத்தி”அப்படி சொல்லாதடி உன் காதலை எல்லாம் காதல்னு சொல்லகூடாது. தெய்வீக அன்பு அப்படி தான் சொல்லனும் சும்மா என்னை சமாதானம் செய்ய எதுவும் சொல்லாத பேசாம இரு.”மீண்டும் அமைதியாக கட்டிக்கொள்ள..
எழில் மீண்டும் தலை கோதிவிட.. அவனுடைய பாப்புகுட்டியோ தந்தையின் கன்னத்தை உராய்ந்து உராய்ந்து கவலையை போக்கியது.
மகவின் பாசத்தில் ” பாப்புகுட்டி.. பாப்புக்குட்டி..” என முத்தமிட..
தந்தை பாசத்தில் அவனோ மீசை உரச முத்தமிட.. எழிலுக்கோ மீசை உரசலில் அவஸ்தையாக நெளிந்தாள்.
அவள் நெளியவும்”ப்ப்ச் என்னடி”என அவள் முகத்தை பார்க்க..அவள் கண்களில் தெரிந்த மையலில் தந்தை வேசத்தை கலைத்து காதலன் பதவிக்கு மீண்டுவிட்டான்.
அதன் பிறகு அவளின் காதல் மழையில் நனைந்தவன் அவளை மோக மழையில் குளிப்பாட்டினான்.
அன்றிலிருந்து தனா எழில்.. எழில்.. என எழில்தாசனாகி போனான். எழுந்தது முதல் தூங்கும் வரை எழிலின் பின்னாலேயே சுற்றி திரிந்தான்.
அவளின் காதல் பொக்கிஷத்தை தனக்குள் வாங்கி கொண்டவன். தன் காதல் தேவதையை தினம் தினம் ஆராதித்தான்.
பகல் எல்லாம் எழில் என்றால் இரவில் பாப்பு குட்டி என வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தான்.
மாதங்கள் தள்ள தள்ள.. எழிலால் எந்த வேலையும் சுறுசுறுப்பாக செய்ய முடியவில்லை. எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் இருப்பதை விட இவள் வயிறும் சற்று பெரியதாகவே இருக்க.. வேலை செய்தால் மேல் மூச்சு வாங்கியது.
கற்பகமோ வீடு பெருக்கு.. துணி துவை குனிந்து நிமிர்ந்து வேலை செய் என போன் செய்து சொல்லவும்… அவளால் முடியாவிட்டாலும் சுற்று வேலைக்கு வரும் பெண்ணை நிறுத்தி விட்டு மெது மெதுவாக செய்ய..
தனாவோ எழில் கஷ்டப்படுவதை கண்டு மாமியாரிடம் போன் செய்து சண்டைக்கு போக.. அவரும் மருமகனிடம் பொறுமையாக எடுத்து சொன்னார்.
எங்கே அதெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை தனா. அந்தளவுக்கு எழிலின் காதலுக்கு அடிமையாகி இருந்தான்.
எழிலையும் வேலை செய்ய விடவில்லை. இதை அறிந்த கற்பகம் வழக்கம் போல திலகாவிடம் பஞ்சாயத்து வைக்க…
அன்று மாலையே திலகாவும் தேவியும் தனா வீட்டிற்கு வந்தனர். தனாவும் வீட்டில் தான் இருந்தான்.வெற்றி மூலம் அதை அறிந்து தானே வந்திருந்தனர்.
இப்போழுது எல்லாம் சரியாக பேக்டரில அவன் இருப்பதே இல்லை. சமையல் கூட எழிலை செய்ய விடுவதில்லை. இருளாயியால் முடியவில்லை என வயலில் வேலை செய்யும் பெண்களில் ஒருவரை சமையலுக்கு வைத்திருந்தான்.
காலையில் எழுந்து அந்த பெண்ணை இதை செய் அதை செய் என படுத்தி எடுத்து.. அதை எல்லாம் அவளுக்கு மூச்சு முட்டி போகும் அளவுக்கு சாப்பிட வைத்து மாத்திரைகள் கொடுத்து என அவன் பேக்டரி கிளம்பவே பதினொரு மணி ஆகிவிடும்.
சென்ற ஒருமணி நேரத்தில் வந்துவிடுவான். தன் கையாலேயே ஏதாவது பழஜீஸ் எடுத்து அருகில் இருந்து குடிக்க வைத்து விட்டு செல்வான். அடுத்த ஒருமணி நேரத்தில் மதியசாப்பாட்டிற்கு வந்துவிடுவான்.
அவளை சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டு இருவரும் ஓய்வாக தூங்கி எழுந்து என மாலை ஐந்து மணிக்கு தான் செல்வான்.அடுத்த ஒரு மணிநேரம்.. அடுத்த ஒருமணி நேரம் என பேக்டரிக்கும் வீட்டுக்கும் காவடி எடுப்பான் . இரவு ஏழு மணிக்கு எல்லாம் வீடு வந்துவிடுவான் வேலை இருந்தாலும் இல்லை என்றாலும்.. வெற்றி கருணாவிடம் சொல்லி கொண்டு…
திலகா “தனா.. சொல்றத கேளு..எழில் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சா தான் பிரசவம் சுபலமா இருக்கும். சுகப்பிரசவம் தான் நல்லது.சிசேரியன் பண்ணா எழில் தான் கஷ்டப்படுவா..பெரியவங்க எங்களுக்கு தெரியாதா.. நாங்க சொல்லற படி எழில் இருக்கட்டும். நீ அமைதியா இரு”
எப்பவும் போல பேசாமல் இறுகிய முகத்துடன் இருந்தான் தனா.
அதில் கடுப்பான திலகா “வேணா அடுத்த மாதமே வளைகாப்பு வைச்சு அவங்க வீட்டுக்கு அனுப்பிச்சிடலாமா..”என கேட்க
தனா பதறி போய் “வேணா.. வேணாம்.. நீங்க சொல்றபடியே செஞ்சுகிறோம்”
அதில் திலகா அது என கெத்தாக ஒரு பார்வை பார்த்தார். தேவி வந்த சிரிப்பை அடக்கி கொண்டார்.
பின்னே எழிலை ஏழாம் மாதம் வளையல் போட்டு அழைத்து கொள்ள முத்துக்குமார் கேட்டிருக்க.. தனா தான் ஒன்பதாம் மாதம் அனுப்புவேன் பிடிவாதமாக சொல்லிவிட்டான்.
அதைக் கொண்டு தான் தனாவை மடக்கினார் திலகா. சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிவிட.. இவன் புலம்பிக் கொண்டே இருந்தான்.
“அவங்களுக்கு என்ன சொல்லிட்டு போயிட்டாங்க..எனக்கு தான் நீ வேலை செய்யறத பார்த்தா கஷ்டமா இருக்கு..”
“பார்த்துக்கலாம் விடுங்க மாமா.. மெதுவா மெதுவா செய்யறேன்” என தனாவை சமாளித்தாள்.
ஆனால் அதற்காக தனா அமைதியாக எல்லாம் இருந்து விடவில்லை. அவன் செய்த அழும்புகள் சொல்ல முடியாதவை.
தனாவிற்காக எழில் சுற்றிய காலங்கள் போய் தனா எழில் பின்னாடி சுற்றுவதை கண்டு.. தனா குடும்பத்தில் உள்ள கல்யாணமான பெண்கள் எல்லாம் எப்படி இப்படி.. எங்களுக்கும் சொல்லு.. என எழிலை நச்சரிக்க ஆரம்பித்தனர்.
ஒருபடி மேலே போய் கனியோ இதற்கென ஒரு வாட்சப் குரூப் ஆரம்பித்தாள். அதில் ஓயாத மெசேஜ் தான். அதில் எப்படி ஒற்றுமையா.. காதலாக… வாழ்வது என கேட்டு நச்சரித்தனர். எழிலுக்கு தான் வெட்கமாகி போனது.
தன் காதலை மெல்ல பட்டும் படாமல் சொல்ல.. அதற்கே ஆஹா.. ஓஹோ என கேலியும் கிண்டல் தான். கனி வாட்சப் குரூப்பிற்கு தனா எழில் படத்தை வைத்து அன்றில் பறவைகள் என பெயரிட்டாள்.

புள்ளி மேவாத மான் – 23 Read More »

images (31)

17 ஆசை வெட்கமறியாது

17 ஆசை வெட்கமறியாது சேவைகள் பெண்ணுக்கு கடனே.. ஆனால் காதல் சேவை ஆணுக்கு கடமை.. டாக்டர் பொண்ணு கிட்டே எதிப்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கல செல்லுக்கு.. கண் மூடி கிடந்தாள் தூங்கும் அழகி போல.. அது இதயத்தில் பெருங்கலகம் மாப்பிள்ளைக்கு தர, மொச்சு மொச்சுன்னு முத்தம் கண்ட இடங்களில்.. கடைசியில் உதட்டுல வந்து நின்று பெண்ணவளின் கால்களை வி போன்ற அமைப்பில் விரியச்செய்து தன் முனை மழுங்கிய ஆசை முள்ளை செலுத்த முனைய.. கன்னி கதவு வாசலில் முட்டி

17 ஆசை வெட்கமறியாது Read More »

19B76D90-43C4-4961-828C-46901CF91AC7

புள்ளி மேவாத மான் – 22

22 – புள்ளி மேவாத மான்

நெடு நேரம் உறக்கம் வராமல் புரண்டு.. புரண்டு படுத்தவன்…அவள் நன்கு உறங்கிவிட்டதை அறிந்து அவளை நெருங்கி லேசாக அணைத்தாற் போல படுத்து உறங்க முயற்சிக்க…
அவள் வயிற்றில் கைகளை மெதுவாக படரவிட்டு கண்களை மூட… சில நிமிடங்களில் பிள்ளை ஸ்பரிசத்தை இவன் கைகளில் உணர்ந்தான்.
அந்த நொடி அவன் மனதில் வெண்மையாக இருந்த வெறுமை எல்லாம் வர்ண ஜாலங்களால் நிரப்பப்பட்டது.
உனக்கு எல்லாமுமாக நான் இருக்கிறேன் அப்பா என அவன் குழந்தை சொல்வது போல உணர்ந்தான்.
“பாப்பு குட்டி உங்களுக்கு என்ன தெரியுதா… நான் அப்பா.. உங்க அப்பா…”
“நான் பேசறது உங்களுக்கு புரியுதா..நீங்க கவனிக்கறிங்களா..”
உடனே குழந்தை வேகமாக துள்ளியது.தன் குழந்தை தான் பேசுவதை கேட்கிறது என்ற மகிழ்ச்சியில் எழிலின் வயிற்றில் கையை வைத்து அதன் ஸ்பரிசம் உணர்ந்தவாறே அதனிடம் பேசினான்.
“பாப்பு குட்டி உங்களுக்கு அப்பாவ பிடிக்குமா…”
“எனக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும். உங்க அம்மாவை அதை விட அதிகமா பிடிக்கும் பாப்பு குட்டி”
தன் தலையை தந்தையின் கைகளில் வேகமாக முட்டி தன் எதிர்ப்பை காண்பித்தது.
“ஹாஹா… ஹா… இப்பவே உங்களுக்கு பொறாமையா… “என சிரித்தான்.
அடுத்த நொடி சிரிப்பு மறைந்து முகத்தில் கவலை படர்ந்தது தனாவிற்கு…
“பாருடா குட்டி அம்மா என்ட்ட பேச மாட்டேங்கறா..”
“உங்க அம்மா அன்பை நான் புரிஞ்சுகலை தான். உங்க அம்மா எம் மேல உசிரா இருக்கானு இப்ப தான் தெரிஞ்சுது.. சொன்னா தான எனக்கு தெரியும். அவ சொல்லாம எங்கிட்ட கோவிச்சுகிட்டு இப்படி பண்றா.. நீயே சொல்லு பாப்பு குட்டி அப்பா பாவம் தானே..”
தன் மனக்குறைகளை யாரும் காது கொடுத்து கேட்காததால் வயிற்று பிள்ளையிடம் பிதற்றி கொண்டு இருந்தான்.
“நான் பண்ணினது தப்பு தான் இல்லேனு சொல்ல.. ஆனா இவ்வளவு பிரச்சினை ஆகும்னு தெரியாம பண்ணிட்டேன் பாப்பு குட்டி. என்னை பாவம்னு மன்னிச்சு விடலாம்ல”
“பாப்பு குட்டி.. உங்க அம்மாவை விட்டா.. எனக்கு யாருடா இருக்கா..”
உடனே குழந்தை அவன் கைகளில் ஒரு உதை விட்டது.
“சாரி.. சாரி..உங்களை சொல்லைனு கோபமா.. நீங்களும் தான் எனக்கு ஓகேவா..”
மனைவியிடம் மன்னிப்பு கேட்க கௌரவம் பார்த்தவன் இன்னும் கண்ணிலே காணாத கருவறை பிள்ளையிடம் மண்டியிட்டான். தன் உதிரத்தில் உதித்தது என்பதாலோ…
“போங்க பாப்பு குட்டி உங்க அம்மா மாதிரியே உங்களுக்கும் கோபம் வருது” என செல்ல கோபம் கொண்டான்.
குழந்தை தன் தலையை தந்தையின் கைகளில் முட்டி முட்டி சமாதானம் செய்தது.
“நீங்க உடனே சமாதானம் ஆகிட்டிங்க.. ஆனா உங்க அம்மா சமாதானம் ஆகாம அப்பாவை கஷ்டப்படுத்தறா.. தெரியுமா..”
“நீங்க கொஞ்சம் அப்பாவுக்காக அம்மாட்ட சொல்லறிங்களா..”
குழந்தை அவன் கைகளில் லேசாக அசைந்து அவனை ஆறுதல் படுத்தியது..
வார்த்தைக்கு ஒரு பாப்பு குட்டி போட்டு ஏதோ ஏதோ பேசியவாறு உறங்கி போனான் தனா.
தந்தை உறங்கியது அறிந்தோ என்னவோ குழந்தையும் தாயின் வயிற்றில் அமைதியாகி உறக்கம் கொண்டது.
தந்தை மகவு பரிபாஷணை அறியாமல்
எழில் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
எழிலும் கோபித்து கொண்டு தாய் வீடு சென்றுவிட்டாளே தவிர.. எப்போதும் தனாவின் ஞாபகமே.. நேரத்திற்கு உண்டானா.. உறங்கினானா.. என
பகலில் கூட வீட்டிலுள்ளவர்களோடு பொழுதை கழித்துவிடுவாள். ஆனால் இரவில் தனாவின் அருகாமையோ.. அணைப்போ.. இன்றி அவளுக்கு முழுமையான உறக்கம் என்பதில்லை.
இன்று தனாவின் அணைப்பை கோபத்தில் நிராகரித்தாலும்.. அவனின் அருகாமையில் ஆழ்ந்த உறக்கம். அதனால் தந்தை பிள்ளை பாசபிணைப்பை அவள் அறியவில்லை.
நாம் இவரை உயிராக காதலித்து கொண்டு இருக்கோம். இவரோ எப்பவோ முடிந்து போன காதலுக்கு நியாயம் செஞ்சிட்டு இருக்காரு.. என ஆதங்கத்தில் இருந்தாள்.
தினமும் ஊரே உறங்கும் வேளையில் எழிலும் உறங்கியதும் தனாவும் அவனுடைய பாப்பு குட்டியும் வெகு நேரம் உரையாடி விட்டே உறங்க செல்வது வழக்கமானது.
மேலும் சில நாட்கள் தனா வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் எழிலின் பின்னாலேயே சுற்றி கொண்டு இருக்க… அவளோ பேசாமல் முறுக்கி கொண்டு இருந்தாள்.
வெளியில் கோபம் முகம் கொண்டு இருந்தாலும்.. உள்ளுக்குள் அவனின் செயலால் மனம் குளிர்ந்து தான் போயிருந்தது.
தனா தன்னை சமாதனம் செய்வதற்காக.. கெஞ்சி கொண்டும்.. கொஞ்சி கொண்டும் பின்னாலேயே சுற்றுவது எழில் மனதில் சாரலாக சாமரம் வீசிக் கொண்டு இருந்தது.
எப்பவும் நாம் தானே பின்னாலேயே சுத்துவோம். இவரை சுத்தல்ல விடறது கூட நல்லா கிக்கா தான் இருக்கு என நினைத்தே
தனாவோடு சமரசம் ஆகாமல் போக்கு காட்டி கொண்டு இருந்தாள்.
இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க…எழிலின் பாராமுகத்தில் தனா மிகவும் துவண்டு போனான். அன்று பேக்டரியில் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் மனமும் உடலும் சோர்வாக இருக்க…
வெற்றியிடம் பேக்டரியை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு தன் ராயல் என்பீல்டை எடுத்து கொண்டு எங்கு செல்வது என தெரியாமல் மனம் போன போக்கில் மெதுவாக ஓட்டி கொண்டு வந்தவனுக்கு அவனின் வயற்காடு கண்ணில் பட…
வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு மெதுவாக வரப்பில் காலாற நடக்க ஆரம்பித்தான். எழிலின் நினைவிலேயே வயற்காடு தென்னந்தோப்பு எல்லாம் தாண்டி மாந்தோப்பிற்குள் வந்திருந்தான்.
நடந்து வந்து கொண்டு இருந்தவனின் காதில் கிசுகிசுப்பான பேச்சு குரல் கேட்க…. குரல் வந்த திசையை நோக்கி சென்றான்.
அங்கே தோப்பை கவனித்து கொள்ளும் செங்கான் மனைவி வேலாயியை வலுகட்டயமாக இழுத்து அணைத்து கொள்ள… அவளோ கழுத்தை நொடித்து கொண்டு கணவனின் அணைப்பில் இருந்து திமிற…அங்கே இருவருக்குள் ஒரு காதல் கண்ணாமூச்சி நடந்து கொண்டு இருந்தது.
தனாவோ அவர்களின் காதலை கண்டு தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தான். ஆம் ரசித்து கொண்டு தான் இருந்தான்.
அவர்களின் அகவை அறுபதிற்கு மேல்.. நரை கூடி..கூன் விழுந்து.. தோல் சுருங்கி..பொக்கை வாயோடு.. அந்த காதலர்கள் பெரிய அழகு இல்லை.. ஆனால் அவர்களின் காதல் கொண்ட மனம் அழகாக இருந்தது. அது அவர்களின் செயலில் மிளிரந்தது.
எதற்கோ வேலாயி கோவித்து கொள்ள… செங்கான் மனைவியை இழுத்து அணைக்க.. வேறு திசையில் பார்த்து கொண்டு இருந்தவளை கன்னத்தில் முத்தம் கொடுக்க..
அதில் வேலாயி வெட்கப்பட்டு கணவரின் நெஞ்சில் முகத்தை புதைத்து கொள்ள.. மனைவியை ஒரு கையால் அணைத்து கொண்டு.. மனைவியின் காதில் கிசுகிசுப்பாக… எதோ சொல்ல..
“மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலையா என் மச்சானுக்கு” என குமட்டில் இடிக்க..
அவரோ பெருங்குரல் சிரிப்போடு மீசையை நீவிக் கொண்டார். பிறகு மனைவியின் காய்ப்பு காய்ந்த கைகளை தன் கையில் எடுத்து வைத்துக்கொண்டு மென்மயாக நீவிவிட்டு அதில் முத்தம் பதித்து
“உனக்குனு நான் எதுவும் பெரிசா செஞ்சதில்ல.எனக்காக.. நம்ம குடும்பத்துக்காக உழைச்சு கையெல்லாம் காப்பு காஞ்சு போச்சுல…” கவலையுடன் உரைக்க…
அதற்கு மனையாளோ”யாருக்கு செஞ்சேன்.. எம் புருஷ சுமைய பாதி வாங்கிட்டே.. அதுல எனக்கு சந்தோசந்தான்.. விசனப்பட ஒன்னுல்ல..” மனம் நிறைந்த வாழ்வுகான புன்னகை முகத்தில் பிரதிபலிக்க சிரிக்க..
அந்த சிரிப்பில் மயங்கிய செங்கானோ தன்னை மறந்து மனைவியை அணைத்து கொண்டார்.அங்கு கலவியில்லாத ஒரு காதல் அரங்கேற்றமானது.
தனாவிற்கு அவர்களின் காதலை காண காண தானும் இது போல எழிலோடு வாழ்வின் இறுதிகாலம் வரை வாழவேண்டும் என ஆசை கொண்டான்.
மனமும் உடலும் சோர்ந்து வந்தவனுக்கு இந்த மூப்பு காதல் அவனை உற்சாகமாக மீட்டெடுத்தது.ஏனோ சொல்ல தெரியாத சந்தோஷம்.. உள்ளத்தில் உடனே எழிலை பார்க்க வேண்டும் என்ற பேராவல்..
அந்த காதல பறவைகளை தொந்தரவு செய்யாமல் … சத்தம் செய்யாமல்.. வந்த சுவடு தெரியாமல்.. ஆனால் வரும் போது இருந்ததிற்கு நேர்மாறாக மிகுந்த துடிப்புடன் சென்றான்.
மாலை மங்கி.. இரவுக்கான ஆயத்த வேலைகளில் வானம் களமிறங்க.. கதிர் முற்றி நெற்குதர்கள் நிறைந்திருந்த பயிர்களை தீண்டி வந்த சில்லென்ற காற்று.. என சுற்றுசூழலும் அவன் மனதை போலவே ரம்யமாக இருக்க..
அவனின் நடையில் இப்போ துள்ளல் வந்தது. நம்மை சுற்றி உள்ளவை ஏற்கனவே தினமும் பார்த்து பழகியதாக இருந்தாலும்.. காதல் கொண்ட மனதிற்கு அவை புதிதாக ரசிக்க கூடியதாக தான் இருக்கும்..
பைக்கை எடுத்தவன் வீட்டிற்கு எதிர்திசையில் சென்றான்.. நேராக தான் வழக்கமாக பொருட்கள் வாங்கும் டிபார்மெண்ட் ஸ்டோரில் எழிலுக்கு பிடித்த டெய்ரிமில்க் சில்க் பெரிய பார் இன்னும் அவளுக்கு பிடித்த சில ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு.. வரும் வழியில் அவளுக்கு மிகவும் பிடித்த மல்லிகை சரம் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தான்.
வீட்டிற்குள் நுழையும் போதே “எழில்.. எழில்.. எங்கிருக்க..”என உற்சாகமான குரலில்..
அவனின் குரலில் உள்ளறையில் இருந்து வந்தவள் அவனை வித்தியாசமாக பார்த்தாள். என்னாச்சு நாம கோபமாக இருக்கோம்னு சோகமாக சுத்திட்டு இருந்தாரு.. இப்ப என்ன திடீர்னு மூஞ்சி ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுது.. என்னனு தெரியலயே.. எதுக்கும் உஷாரா இருந்துக்கோ எழிலரசி… என தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
இது எதையும் கண்டு கொள்ளாமல்.. அவள் வந்ததும் அவளை இழுத்து சோபாவில் அமர வைத்து தானும் அவளருகில் அமர்ந்து கொண்டு சாக்லேட் பாரை எடுத்து..
“எழில் இந்தா உன்னோட பேவரட் சாக்லேட்.. இப்ப சாப்பிடறியா.. இல்லல்ல வேணாம் உனக்கு கொஞ்சம் மெல்டானதான பிடிக்கும். அப்புறமா சாப்பிடு.. இப்ப வேணா ட்ரைப்ரூட்ஸ் பால்ஸ் சாப்பிடறியா..உனக்கு பிடிக்கும்ல.. வேணா வேணாம் நேந்திரங்கா சிப்ஸ் சாப்பிடறியா..” தனா தன் போக்கில் பேசி கொண்டே போக..
இவருக்கு என்னாச்சு நான் இவரிடம் சண்டை போட்டது எல்லாம் மறந்து போச்சா.. நான் பேசமாட்டேனு தெரிஞ்சு இவர் பாட்டுக்கு நான்ஸ்டாப்பா பேசிகிட்டே போறாரே…என நினைத்தாள்.
தனாவோ இப்ப பூச்சரத்தை கையில் எடுத்து
“நெருக்கமா கட்டிய மல்லிகப்பூ உனக்கு பிடிக்கும்ல.. இப்பவே வச்சுகறியா..”என ஆசையோடு கேட்க..
அவனின் மகிழ்ச்சியும் நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் முகத்தில் தெரிந்த பொலிவும்… அவன் உதடுகளோடு கண்களின் சிரிப்பும்…
கண்டவளுக்கு அவனை பேசி காயப்படுத்த விரும்பாமல்.. அமைதியாக பூவை வாங்கி தலையில் சூடிக் கொண்டாள்.
எதுவும் எதிர்மறையாக பேசாமல் பூவை வாங்கி வைத்து கொள்ளவும்.. தனாவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
எழிலை தாவி அணைத்து கொண்டான்.அவனின் வேகமான அணைப்பில் எழில் தான் சற்று மிரண்டுவிட்டாள்.
“அச்சோ.. பாப்பா.. “என கத்திவிட்டாள். அதன் பின்பு தான் எழிலின் நிலையறிந்து தன் வேகத்தை சற்று குறைத்து..
அவளின் சேலையை லேசாக விலக்கி.. வயிற்றில் கை வைத்து..
“சாரிடா பாப்புகுட்டி.. சாரி.. உங்களுக்கு வலிக்குதா.. அப்பா தெரியாம பண்ணிட்டேன்.. சாரி”
அடப்போடா தகப்பா.. உனக்கு எப்ப பாரு இதே வேலையா போச்சு.. தப்பு பண்ணிட்டு சாரி கேட்க வேண்டியது.. உனக்கு எங்க அம்மா தான் கரெக்ட்..என ஒரு உதை கொடுத்து விட்டு அமைதியாகிவிட்டது.
தனாவின் பேச்சிற்கு வயிற்று குழந்தையின் பதிலடி இதை எல்லாம் பார்த்தவள்.. என்னடா நடக்குது இங்கே..என புரியாமல் முழித்தாள். அவளுக்கு இதெல்லாம் தெரியாதல்லவா…
அவளின் முழியை கண்டவன் “நீயும் பேசலையா.. இந்த வீட்ல வேற யாரு இருக்கா என்ட பேச… அதான் நீ தூங்கியதும் நானும் பாப்பு குட்டியும் தூக்கம் வரவரை பேசிட்டு இருப்போம்”என்றான் முகத்தை சோகமாக வைத்து கொண்டு..
அவன் சொல்லியது உண்மை தானே என நினைத்து வருத்தபட்டாள். ரொம்ப ஓவரா தான் பண்றமோ.. என நினைத்து கொண்டிருக்க..
அவளின் முகமாற்றைத்தை சரியாக படித்தவன் அவள் இளகி வரும் தருணம் அறிந்து…
“சாரிடி.. சாரி.. எல்லாத்துக்கும் சாரி”என அவள் தாடையை பிடித்து கொஞ்சினான்.அவனின் கொஞ்சலில் மெல்லிதாக சிரிக்க..
அந்த சிரிப்பே.. அவனுக்கு போதுமானதாக இருக்க..இன்னும் நெருங்கி அவளை மெல்ல அணைக்க… அவளும் அவனின் நெஞ்சில் சாய..
அவளை கைகளில் அள்ளி கொண்டவன் தங்கள் அறையை நோக்கி சென்றான்.
எழில் தான் சிணுங்கி கொண்டே..
” மாமா வாசற்கதவு திறந்திருக்கு”
“இருளாயி முன்னால திண்ணைல உட்கார்ந்திருக்கு”
“விளக்கு வைக்கற நேரம் வேணாம்”
“விளக்கு அணைக்கற நேரமே வந்திடுச்சு”
“நான் இன்னும் டிபன் பண்ணல..”
“எனக்கு இன்னைக்கு பசிக்கலடி”
“எனக்கு பசிக்கும் மாமா”
“உன் பசியை மறக்க வைக்கற வித்தை மாமனுக்கு தெரியும்”
“மாமா..”மேலும் அவள் ஏதோ சொல்ல வர..
“அமைதியா வாடி.. இன்னைக்கு உன் சால்ஜாப்பு எல்லாம் மாமன்கிட்ட பலிக்காது”
அவளுக்கும் அவனின் அணைப்பு தேவைப்பட..அவன் கழுத்தை தன் கைகளால் கோர்த்து கொண்டு வழக்கம் போல் அவனை சைட் அடித்து கொண்டு வந்தாள்.
அவள் பார்வைக்கு சளைக்காமல் பதில் பார்வை கொடுத்தவன்.. அவளை படுக்கையில் விட்டு அவள் அருகில் இடைவெளியின்றி படுத்தவன்
கிசுகிசுப்பாக அவள் காதுகளில் “நாம இப்படி… பாப்பு குட்டிக்கு ஏதாவது ஆகிடுமா..”பயத்துடன் கேட்க.. அவனின் முகத்தில் பயத்தை மீறிய ஆசை தென்பட…
அவனின் முகத்தை காதல் பார்வையால் வருடியவாறே… இல்லை என்பதாக மெல்ல தலையை ஆட்டினாள்.
அவள் பதிலில் சீறிப் பாயும் காளையாக.. அவள் மேல் படர…

“மாமா.. மாமா. மெதுவா..” என அவனின் வேகத்திற்கு அணைப்போட.. வருடும் தென்றலாக அவளை ஆட்சி செய்தான்.
நீண்ட நாட்கள் ஊடலுக்கு பின் உண்டான கூடல் அல்லவா..
காமன் கலைகள் பயில… இரு பட்சிகள் முனைப்போடு இயங்க…
தாய்மை கொண்ட பேடையின் நிலையே வேகத்தடையாக இருக்க…
இருந்த போதிலும் அந்த கூடலை அணு அணுவாய் அனுபவிக்க விருப்பம் கொண்டது காதல் பறவைகள்.
பெண்ணவளின் மோகனங்கள் எல்லாம் மன்மதனின் மோகம் தீர்க்கும் மார்க்கமாக அமைய…
அவளின் இதழ்ரசம் மதுரசத்தை விட அதிக போதை ஊட்டுவதாக இருக்க… மேலும் மேலும் அவள் இதழிலேயே குடி கொண்டான்.
மங்கையின் பொன்னுடலில் காதல் ராஜன் கர்ம வீரனாக.. இதழும் கைகளும் காட்டிய மாய வித்தையில்..
மாயங்கள் யாவும் காயங்களாக.. காதல் அச்சாரங்களாக பதிய..
அச்சாரங்கள் கண்டு நாணம் கொண்ட காதல் தேவதையோ.. தலைவனின் ஆசைகளுக்கு தன்னை ஈடு கொடுத்து..
காதல் தந்து காதல் மீட்டாள்.
தன்னை தொலைத்து.. தன்னை தொலைத்த இடத்திலேயே மீட்டு கொண்டான் மீகிய காதலோடு அந்த காதல் கண்ணன்.

“என் சேலையும்
உன் வேட்டியும்
ஸ்பரிசிக்குமோ..
என்மஞ்சள் வாசனை
உன் சந்தன வாசனை
சங்கமிக்குமோ..”

அவள் காது மடலை உரசியவாறே ரசனையாக அவள் கவிதையை அவளுக்கே படித்தான்.
” ஸ்பரிசித்ததா… சங்கமித்ததா..” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்
நிறைவான கூடலில் உடல் சோர்ந்தாலும் உள்ளம் நிறைந்திருக்க.. அவளை அள்ளி தன் மார்பில் சாய்ந்து கொண்டு….

“என் நெஞ்சில்
மஞ்சம் என
தஞ்சம் கொண்டு
துயிலும் காலம்
வந்ததா… ”
என்றான் அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்து.. எழிலுக்கு எழிலானவன்..

புள்ளி மேவாத மான் – 22 Read More »

Photo-20240402-144052-S-993x1291

16 ஆசை வெட்கமறியாது

16 ஆசை பூனை போன்ற செல்வாவின் கைகளின் மென்அழுத்தம் புதுபெண்ணுக்கு உன்மத்தம் கொடுக்க.. அவளோ அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக ஒருக்களித்து படுக்க முயல.. ஆணவன் கை ருசி கண்டதால் விடாது இன்னும் கெட்டியா பிடித்துக்கொள்ள.. இந்த தள்ளு முள்ளில் இருவரின் உடலிலும் ஒருசேர மின்சாரம் பாய்ந்தது.. சோளிக்கு மேலான தொடுகை போதவேயில்ல ஆசைக்காரனுக்கு.. நேரடியாக அந்த கனியா கொய்யா காயை தொட்டு தடவி, கண் பார்த்து, மயங்கி வாய் கொண்டு ருசிக்க விரும்பினான்.. ஆண்களை தூங்க விடாது

16 ஆசை வெட்கமறியாது Read More »

2 சில்லுன்னு ஓரு விவாகரத்து

2 ஜில்லு முரட்டு வாலிபனிடம் வலிய சிக்கிய வஞ்சிகொடி தன் ஆதாரமாய் அவனை பற்ற அவனுக்கோ போதையால் காமத்தின் தீயொன்று தேகமெங்கும் பரவ தன் சுய கட்டுப்பாட்டையும் மீறி பூவையை முழுக்க ஆட்கொண்டான். முதல் உறவு என்பதும் கன்னியைத் தான் சுகிக்கிறோம் என்பதும் காதல் ஈட்டியின் முனை பட்ட சூட்டில் கண்டுகொண்டான். அடியில் கிடந்தவளின் துள்ளலும் பக்கவாட்டு கண்ணீர் துளியும் அவளுக்கும் வலிக்கிறது என்பது அவனுக்கும் ஏதோ பண்ண.. “சாரி! ப்ளீஸ் என்னை பொறுத்துக்கோ” ஆங்கிலத்தில் மன்னிப்பை

2 சில்லுன்னு ஓரு விவாகரத்து Read More »

Photo-20240402-144052-S-993x1291

15. ஆசை வெட்கமறியாது

15 “காலைத் தொடக்கூடாது.. விடுடா ஹல்க்கு!” நேரா படுத்துகூச்சத்தோடு தன் காலை விஜி சுருக்க எடுக்க.. குதிகாலில் நெற்றி வைத்தவனோ, தன் நரம்புகளோடிய வலிய கரங்களை கொண்டு புத்தம் புது மனைவியின் பாதங்களை நகராது சிறை பிடித்து தன் முகம் முழுவதும் பத்து விரல்கள் மீது படிய வைக்க.. ‘ஐயையோ! இப்படி ஒரு சரணாகதியா?!!’ இதுதான் கணவன் மனைவி என்றானால் செய்வார்களா? இப்படித்தான் காதல் உறவு தொடங்கணுமா? பாலியியலை பாடமாய் படித்த மருத்துவ மாணவி முதலிரவு பள்ளியறையில்

15. ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

14 ஆசை வெட்கமறியாது

14 AV இன்றே வேணும் என்ற எந்த ஆத்திரமும் இல்லைதான் செல்வாவுக்கு.. ஆனால் விஜியின் நேர்மை தான் எரிச்சல் தந்தது.. சொல்றேன் சொல்றேன் என்று சொல்லியே அவளை நெருங்கும் விளிம்புக்கு தள்ளிவிட்டாள்.. அதனாலேயே அவள் பின்னோடு அணைக்கும் நிலை.. விஜிக்கு வேணும்னா இது புதுசு.. செல்வா கற்பனையில் காதலாய் தொட்டு மகிழ்ந்திருக்கிறான் அவனுக்கு அந்நியமாயில்லை. “எதுக்கு கிட்டே வந்தே?” சட்டுனு விஜி பதறி திரும்ப.. முதுகின் அருகில் இருந்த செல்வாவின் முகம் மார்புக்குள் பதிய.. பதறி தள்ளி

14 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

12 ஆசை வெட்கமறியாது

12 எதிர் முனையில் அஸீம் குரல் கேட்டதும் வடிவேலு போல முகம் போச்சு நம் விஜிக்கு.. இந்த இம்சையா? ஐயோ!! அம்மா!! தப்பிக்க முடியாதே!!எட்ட இருக்கும் வரை தேவனாய் தெரிந்தான் கிட்டே வந்தா கோரை பல்லு காட்டி அரக்கனாய் இருக்கான்.. வச்சு தள்ள முடில.. இதயம்ன்னா என்ன? கேட்பான் போல.. மத்தவங்களுக்கும் ஏதாச்சும் வேலை வெட்டி இருக்கும்.. தெரியுதா? லூசுப்பய!! ஒன்னும் கண்டுக்க மாட்டுறான்.. இவன் கிட்டே பேசுவதா? விடுவதா?ஊஞ்சலாட்டத்தில் .. விஜி பேசாது இருக்க.. சாப்டியா?

12 ஆசை வெட்கமறியாது Read More »

1 சில்லுன்னு ஒரு விவாகரத்து

1 சில்லுன்னு ஒரு விவாகரத்து! அயல் மாநிலமோ? நம் மாவட்டமோ? புலம்பெயர்ந்து வந்தாரை வருக! வருக! வென்று ஆரத்தழுவி, அன்பு கூர்ந்து தன்னில் பொதிந்து பாதுகாத்துக் கொள்ளும் சீர் பெருமை கொண்ட தலைநகரமாம் சென்னை நம் நாயகி ஷால்யாவின் ஊர். அது ஓர் ஏப்ரல் மாதத்தின் சனிக்கிழமை இரவு, வளமானவர்கள் வாழும் பகுதியில் ஷால்யாவோடுமூன்று பெண்கள் மட்டும் பங்கிட்டு தங்கும் உயர்த விருந்தினர் மாளிகையின் நான்காம் தளம் குத்து பாட்டுக்களால் அதிர்ந்துக்கொண்டிருந்தது. மொத்த கட்டிடத்தின் அத்தனை பெண்களும்

1 சில்லுன்னு ஒரு விவாகரத்து Read More »

error: Content is protected !!
Scroll to Top