ATM Tamil Romantic Novels

தொடர் கதை

1000018542

உயிரோடு விளையாடும் அழகிய 01

அத்தியாயம் -1   “மம்மி அந்த வீட்டுக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”   “இன்னும் கொஞ்ச தூரம் தான் போகனும்..”   “டாடி எப்போ வருவாரு?”   “டாடி பிஸ்னஸ் விஷயமா வெளியூர் போயிருக்காரு.. அடுத்த வாரம் வந்துருவாரு..”   “நான் பின்னாடி பாட்டிக்கிட்டப் போய் உட்கார்ந்துக்குறேன்..”   “டேய் இஷான்.. பார்த்துடா.. இடிச்சுக்கப் போற..”   காரை செலுத்திக் கொண்டிருந்த ரக்ஷிதாவின் எச்சரிக்கையை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் பின்சீட்டில் இருந்த தனது பாட்டி […]

உயிரோடு விளையாடும் அழகிய 01 Read More »

DE2DF72F-6973-4A3F-822A-9C0AE46C6FD0

27 -புயலோடு பூவுக்கென்ன மோகம்

27- புயலோடு பூவுக்கென்ன மோகம்

சொன்னது போலவே நிகிதாவை கூட்டிக் கொண்டு இரண்டு நாளில் தாமரையூர் சென்று விட்டான் வீரா. அவளை கிளப்பி கொண்டு செல்வதற்குள் அவன் பட்ட பாடு அப்பப்பா…

வெங்கட் அவ்வளவு அட்டகாசம் பண்ணினார். சி ஷேப் பில்லோ.. ரிலாக்ஸ் ஷோபா.. மெட்ரினிட்டி கவுன் வீரா வாங்கியது தெரிந்தும் வீம்புக்கே இவரும் வாங்கினார். கூடை கூடையாக பழ வகைகள்… பாதாம் பிஸ்தா குங்குமபூ ஹெல்த் ட்ரிங்ஸ் மிக்ஸ் என தனக்கு தோன்றியதை எல்லாம் வாங்கி வீரா முன் கெத்து காண்பித்தார்.

இவரை என பல்லை கடித்து கோபத்தை அடக்கினான்.நிகிதாவுக்கோ தனது அப்பா பண்ணுவதையும் வீராவின் கடுப்பான முகத்தையும் பார்த்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இவள் தலையை குனிந்து சிரிப்பை அடக்க பெரும்பாடு பட.. வீரா நிகிதாவை ஏகத்துக்கும் முறைத்தான்.

இதில் கிளம்பும் போது ஏசி பிட் பண்ண ஆள் அனுப்பவா என கேட்டு வீராவின் பிபியை எகிற வைத்தார். நிஜமாகவே மகள் மேல் உள்ள பாசத்தில் செய்கிறாரா… தன்னை மட்டம் தட்டவே செய்கிறாரா.. என நினைத்து எரிச்சல் பட்டான்.

ஒரு வழியாக தங்கள் வீட்டிற்கு வந்தவுடன் தான் அப்பாடா என நிம்மதியானான். அந்த நிம்மதியும் விசாலாவின் பேச்சில் காணாமல் போனது. காரில் இருந்து இறக்கி வைத்த பொருட்களை பார்த்ததும்..

“ஏன் எங்க மருமகளுக்கு நாங்க வாங்கி தர மாட்டோமா… ஏன் அதுக்கு கூடவா விதியத்து போயிட்டோம்னு நினைச்சிகிட்டானா.. இவன்கிட்ட பணம் இருந்தா.. நம்மள இளக்காரமா நினைப்பானா.. இரு அவன.. ” தம்பிக்கு போன் செய்யப போக…

“அம்மா… கொஞ்சம் சும்மா இரு..” என போனை வாங்க போக..

“நீ இருடா… அவன என்னன்னு கேட்டா தான் அடங்குவான்..” விசாலா துள்ள..

அய்யாவு “விசா.. இப்ப எதுக்கு பிரச்சனை பண்ற.. நம்ம பொன்னிக்கு நாம செய்யறதில்லையா.. அது மாதிரி அவங்க பொண்ணுக்கு அவங்க செய்யறாங்க.. பேசாம அமைதியாஇரு..” என அதட்டவும் தான் அடங்கினார்.

நிகிதா இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் பயண களைப்பில் போய் படுத்து கொண்டாள்.

“மருமக சோர்வா போய் படுத்துருக்கு பாரு.. ஏதாவது குடிக்க கொண்டு போய் கொடு..”

அப்போது தான் வீராவும் நிகிதா அங்கு இல்லை என பார்த்தவன் தங்கள் அறைக்கு சென்றான்.

அங்கு சோர்ந்து படுத்திருந்தவளின் அருகில் சென்று அவளுடைய தலைப்பகுதியில் அமர்ந்து அவளின் தலையை எடுத்து தன் மடியில் வைத்து கலைந்திருந்த முடிகற்றைகளை ஒதுக்கி விட்டு ஆதுரமாக தடவி கொடுத்தவன்…

“அமுல் பேபி.. என்னடி பண்ணுது..”

“ஒன்னும் இல்ல மாமா… கொஞ்சம் டயர்டா இருக்கு…”

“ஏதாவது சாப்பிடறியா…” என கேட்டு கொண்டு இருக்கும் போதே விசாலா ஜீஸ் கொண்டு வர… அவரின் முன்னால் வீராவின் மடியில் படுத்திருப்பது கூச்சத்தைக் கொடுக்க.. அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.

“கண்ணூ.. இப்படி எல்லாம் எந்திரிக்க கூடாது. புள்ளைக்கு ஆகாது. இந்தா இந்த ஜீஸ் குடி..”

வாங்கி குடித்தவளை படுக்க வைத்து விட்டு தன் தாயோடு பின்னே சென்றான் வீரா தன் தாயை சாமாதானம் செய்யும் பொருட்டு..

அடுத்த நாளில் இருந்து இருவரும் பேக்டரிக்கு செல்ல ஆரம்பித்தனர்.இந்த தடவை இருவரும் தெளிவா பேசிமுடிவு எடுத்தனர். வீரா சம்பாதித்து கொண்டு வந்த பணம் பேக்டரியில் போட்டு பார்ட்னராக இணைந்து கொள்ள வீரா நினைக்க…. பேக்டரியின் மொத்த கேப்பிட்டல்ல இவன் பணம் சிறுதுளி என்பதால் நிகிதா வேண்டாம் என சொல்லி வீராவை வொர்க்கிங் பாட்னராக பேக்டரியில் இணைத்து கொண்டாள். அவன் சம்பாதித்த பணத்தை என்ன செய்வது என வீரா கேட்ட போது நிகிதா அதை இப்போதைக்கு டெபாசிட் செய்து விட்டு அதை பிறகு என்ன செய்வது என சொல்வதாக சொல்லிவிட்டாள்.

ஆபீஸ் கிளம்பி வந்தவளை பார்த்து வீரா பிரம்மித்து போனான். லெனின் காட்டன் புடவையில் அதற்கு ஏற்றாற் போல த்ரெட் ஜ்வல்ஸ் போட்டு வந்து நின்றாள். அப்படி ஒரு அமரிக்கையான அழகு. அவளின் நடை உடை அனைத்திலும் அப்படி ஒரு ஆளுமை. வெங்கட் மகள் என்பதை நிருப்பித்தாள். வெங்கட்டிடம் இருந்த நிமிர்வு இவளிடமும் இப்போது இருந்தது. என்ன தான் பார்ப்பவர்களுக்கு திமிராக தெரிந்தாலும் ஆயிரம் பேரை வைத்து வேலை வாங்கும் திறமை உள்ளவர்களுக்கு நடை உடை பேச்சு எல்லாவற்றிலும் ஆளுமை வந்துவிடும்.

நிகிதா அப்படி தான் இருந்தாள். பேக்டரிக்கு போக வர நிகிதாவுக்கென ஒரு காரை வாங்கி கொடுத்திருந்தார் வெங்கட் . அதில் தான் இருவரும் சென்றனர். வீரா வொர்க்கிங் பார்டனராக நிகிதாவுக்கு கீழே வேலை செய்தாலும் சந்தோஷமாகவே செய்தான். மாமனாரின் பேக்டரியில் வேலை செய்த போது இருந்த பிடிக்காத தன்மை இப்போது இல்லை. மனைவியிடம் வேலை செய்து சம்பளம் வாங்குவதை சந்தோஷமாகவே செய்தான்.

வீரா வந்ததுக்கு பிறகு ராகவாச்சாரி உதவியோடு நிகிதாவின் பொறுப்புகளை வீரா ஏற்றுக்கொள்ள நிகிதா கொஞ்சம் ரிலாக்ஸாக நிர்வாகம் பண்ணினாள்.

இருவரும் பேக்டரிக்கு காலையில் போவார்கள். மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தால் சாப்பிட்டு விட்டு வீரா மட்டுமே செல்வான். நிகிதா ஓய்வு எடுத்து கொள்வாள். மாதங்கள் நெருங்க… அவளை ஓய்வு எடுக்க சொல்லி வீட்டில் விட்டு அவன் மட்டுமே செல்வான்.

நிகிதா சம்பளத்தில் தான் தங்களுக்கான செலவை பார்த்து கொள்வான். நிகிதா கொடுக்கும் சம்பளம் லட்சங்களில் இருக்க.. வீட்டு செலவுக்கு தன் அம்மாவிடம் ஒரு தொகையை கொடுத்துவிட்டு மிச்சத்தை சேமித்து வைத்தான். நிகிதாவிற்கு கூட தேவைக்கு தான் செலவு செய்தான்.

நிகிதா கூட கிண்டல் செய்வாள்.

“என்ன உங்க எம்டி சம்பளம் சரியாக தருவதில்லையா.. குறைவான சம்பளத்திற்கா இத்தனை வேலை வாங்குது அந்தம்மா..”

“ஆமாம்டி.. ரொம்ப ஓவர் வேலை.. கொடுக்கற சம்பளத்துக்கு மேல வேல வாங்கறாங்க…”

“இருங்க நான் போன் பண்ணி கேட்கறேன்..”

“வேணாம்டி.. பணத்திமிரு புடிச்ச பொம்பள.. உன்ன மரியாதை இல்லாம பேசிடும்..”

“அந்தம்மா பேசினா.. எனக்கு வாய் இல்லையா.. அந்த லேடி நாலு வார்த்தை பேசினா.. நான் இரண்டு வார்த்தை பேசமாட்டனா..”

“அது ரப்பு பிடிச்ச பொம்பள.. அது உன்னை ஏதாவது பேசிட்டா.. என்னால தாங்க முடியாதுடி..” என்றான் பாவமாக முகத்தை வைத்து கொண்டு..

“சரி விடுங்க மாமா.. உங்களுக்காக அந்தம்மாவ சும்மா விடறேன்..”

“மாமனுக்கு உடம்பு எல்லாம் வலிக்குது.. கொஞ்சம் பிடிச்சு விடேன்”

“நான் பிடிச்சு விட்டா நல்லா இருக்குமா… அந்த கல்யாணி பிடிச்சு விட்டா தான உங்களுக்கு பிடிக்கும்..”

“ஏன்டி நல்லா தான போயிட்டு இருக்கு.. விடு நீ பிடிச்சு விடவேண்டாம்..” என நிற்காமல் ஓடிவிட்டான். இருந்தால் கல்யாணி பற்றி பேசியே டார்ச்சர் பண்ணுவாளே…

பேக்டரியில் ஆபீஸ் வளாகத்தில் வீராவை தன் அறைக்கு வருமாறு நிகிதா அழைக்க…

“மே ஐ கமின் மேம்..” கதவை தட்டி விட்டு உள்ளே போக…

“எஸ் சொல்லுங்க வீரா.. உங்க வேலை எல்லாம் எப்படி போகுது.. சேலரி எல்லாம் ஷேட்டிஸ்பையா இருக்கா…”

வீரா நிகிதாவின் விளையாட்டை ரசித்து கொண்டே..

“ம்ம்ம்.. இருக்குங்க மேடம்..”என்றான் பணிவாக…

“இல்ல.. உங்க மிஸஸ் சேலரி பத்தலைனு சொன்னாங்களாம்.. கேள்விபட்டேன்.. அப்படியா சேலரி பத்தலையா…” என கேட்க..

வீரா கைகளை கட்டி கொண்டு மிக பவ்யமாக.. “அப்படி இல்லிங்க மேடம்..”

“வேணும்னா.. ஒன்னு செய்ங்க.. அவங்க ரெசியூம் கொடுங்க.. அவங்களுக்கு ஏதாவது ஜாப் போட்டு கொடுக்கறேன்..”

“யாருக்கு மேடம்.. நீங்க என் ஒய்ப்கு…”

“எஸ்.. அப்கோர்ஸ்..” உல்லாசமாக ரோலிங் சேரை சுழட்டி கொண்டே..

“அடிங்.. யாரு.. யாருக்கு வேலை கொடுக்கறது..”

நிகிதா கிளுக்கி சிரிக்கவும் அருகில் சென்று அணைத்து கொண்டான்.

மாதாந்திர செக்கப்கு வீரா நிகிதாவை ஹாஸ்பிட்டல் கூட்டிக் கொண்டு போனான். அங்கு ஸ்கேன் செய்ய ஸ்கீரினில் குழந்தை குட்டி கை கால்களை குறுக்கி கொண்டு.. லாவமாக துருதுருனு நீந்தி கொண்டு இருந்தது. மிகவும் துடிப்பாக நான் உங்க பிள்ளையாக்கும்… உங்களுக்கு சளைத்தவனில்லை என நிருபித்தது.

ஆசையாக ஸ்கீரினை தொட்டு தடவி பார்த்து கொண்டு இருந்தான். என் பிள்ளை… என் உதிரம்.. பார்த்தது பார்த்தபடியே இருந்தான்.

நிகிதாவின் கையை பிடித்து கொண்டு… “பாரு அமுல் பேபி…. நம்ம பேபி…எவ்வளவு ஆக்டீவா இருக்கு.. என்னை மாதிரி இல்லல்ல… உன்னை மாதிரி சுறுசுறுப்பாக இருக்குடி..” கண்களில் நீர் மிதங்க…

“ஆமாம் மாமா..” என்றாள் பூரிப்புடன் தலை அசைத்து… நிகிதா இதை வாய் வார்த்தையாக சொன்ன போது.. இவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என நினைத்திராதவன்… தன் வாழ்க்கையின் உச்சகட்ட ஆனந்தத்தை இன்று அனுபவித்தான். இதை இழந்து எதை சம்பாதிக்க போனோம் என கவலைப்பட்டான்.

அன்று முழுவதும் வேறு உலகத்தில் மிதந்து கொண்டு இருந்தான். அவனை பார்த்து பார்த்து சிரித்தாள் நிகிதா. அது எல்லாம் எங்கு அவன் கவனித்தான். அவன் தன் பிள்ளையுடன் கற்பனை உலகத்தில் சஞ்சரித்து கொண்டு இருந்தான்.

தன் உயிரோடும் உணர்வோடும் கலந்து தனக்குள் சுமக்கும் குழந்தையை உருவான நாளில் இருந்து பிரசவிக்கும் நாள் வரை அதன் துடிப்பையும் அசைவையும்… எது தின்றால் செரிக்கும் செரிக்காது.. எப்படி படுக்கனும்.. எப்படி இருக்கனும்.. என பத்து மாதம் குழந்தையோடு சொர்கத்தில் வாழும் பெண்ணிற்கு…. இதை எல்லாம் ஆணிற்கு பிள்ளையை கையில் ஏந்தும் நாள் வரை கனவிலும் கற்பனையிலும் மட்டுமே கிடைக்கும் என்று யார் சொல்வது… அப்படி தான் இருந்தது வீராவின் நிலை.

நிகிதாவிற்கு இயற்கை விவசாய பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்தது. தாமரையூர் வந்த பிறகு அவளுக்கு விவசாயத்தில் மேல் ஒரு ஆர்வம்.அதை பற்றி நிறைய தெரிந்து கொள்ள.. தெரிந்து கொண்டதில் இயற்கை விவசாயமே சிறந்தது என.. அய்யாவுவிடமும் வீராவிடமும் தன் எண்ணத்தையும் திட்டத்தையும் சொல்ல… இருவருக்கும் பிடித்துப் போக… சம்மதித்தனர்.

அதற்காக வீரா டெபாசிட் செய்திருந்த பணத்தையும்.. அய்யாவின் சேமிப்பையும்.. பேங்க் லோன் எடுத்தும் ஐந்து ஏக்கர் விவசாய பூமி வாங்கினாள். பொன்னியின் கணவன் கணேசன் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து கொண்டு இருந்தார்.

அவரை வைத்து விவசாயம் செய்தாள். அவரோடு சேர்ந்து இயற்கை விவசாய பயிற்சி பட்டறைக்கு எல்லாம் போனாள்.வீராவிடம் பேக்டரியை ஒப்படைத்து விட்டு வயிற்றில் பிள்ளையோடு இவள் அலைவதை கண்டு வீரா தான் பயந்து போனான்.

வீராவோடு வாழும் சந்தோஷமா… விசாலாவின் கவனிப்போ.. முன்பை விட நிகிதா கொஞ்சம் சதை போட்டு புசுபுசுவென இருந்தாள். மாதம் நெருங்க.. நெருங்க… வீரா மனதில் பிரசவத்தை நினைத்து பயம் வந்தது.

அதை நிகிதாவிடம் காட்டி அவளை பயமுறுத்த விரும்பாமல் தன் மனதுக்குள் வைத்து கொண்டான்.

ஒரு நாள் நிகிதா பண்ணைக்கு போயிருக்க.. பேக்டரிக்கு தேவையான முக்கியமான பைல் ஒன்றை நிகிதா தங்கள் அறையில் வைத்திருக்க.. அதை தேடி கொண்டு இருந்தான்.

“எங்க தான் வச்சாளோ.. தெரியல…”

“வீட்ல ரெஸ்ட் எடுனு சொல்லிட்டு போனேன். நான் அந்த பக்கம் போனதும்.. இந்த பக்கம் கிளம்பி போயிருக்கா.. இந்தம்மாவும் மருமக எது சொன்னாலும் பண்ணினாலும் தலையாட்டி வைச்சிடுது.. எனக்கு தான் பயமா இருக்கு.. இவளுக்கு கொஞ்சம் கூட பயமே இல்ல…” என புலம்பி கொண்டே தேடியவன் கிடைக்காமல் போக.. அவளின் போனிற்கு அழைத்தான்.

அதுவும் அங்கேயே சத்தமிட… அங்கிருந்த மேஜை மேல் இருந்தது. அதன் அருகே போக.. டிஸ்பிளேவில் அவனின் படத்தோடு கருவாயன் காலிங் என இருக்க… அதை கையில் எடுத்து பார்த்தவன்.. இவளுக்கு திமிர பாரேன்.. என நினைத்து சிரிக்க…

அவனின் கைப்பட்டு வாட்சப் ஓபனாக அதில் கல்யாணியோடு இவன் சேட்டிங் செய்தது.. வாட்சப் கால் என எல்லாம் இருக்க.. சந்தேகம் கொண்டுஅவளின் போனை ஆராய… அதில் நிகிதாவின் இந்திய நம்பரில் ஒரு வாட்சப்…அது இல்லாமல் கல்யாணியின் நம்பரில் பேரலல் ஸ்பேஷ் வாட்சப் ஒன்று இருந்தது.

எல்லாமே அவனுக்கு புரிந்து போனது. செகண்ட் லைன் ஆப்பில் கனடா நம்பர் வாங்கி தன்னிடம் கல்யாணியாக பேசியிருக்கிறாள் என்று…

என்னை ஏமாற்றி எப்படி எல்லாம் பேசி டார்ச்சர் பண்ணியிருக்கா.. இவளே கல்யாணியாக பேசினது மட்டுமில்லாமல் கல்யாணி கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கறியானு கேட்டு எத்தனை சண்டை.. எவ்வளவு டென்ஷன் பண்ணியிருக்கா… இன்னைக்கு வரட்டும் இவளை… என கோபத்துடன் அவளுக்காக காத்திருந்தான்.

27 -புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

என் மோகத் தீயே குளிராதே 32

அத்தியாயம் 31     “என்ன ஹரி.. எதுக்கு முகத்தை இப்படி வைச்சுருக்க?” என்ற அர்ஜுனுக்கு பதிலாக வேறொரு அறைக்கு செல்லும் கலாவதியையும் ஹாசினியையும் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க, அதனை புரிந்து கொண்ட அர்ஜுன்,     “இந்த மாதிரி நேரத்துல நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா படுக்குறது தான் நல்லது.. அவங்க எது பண்ணாலும் உங்க நல்லதுக்கா தான் இருக்கும்..” என்ற அர்ஜுனை முறைத்துப் பார்த்தான் ஹரிஷான்த்.      “பாட்டி எப்ப ஊட்டில இருந்து

என் மோகத் தீயே குளிராதே 32 Read More »

IMG-20240904-WA0002

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 15,16

15   நிரஞ்சன் வழக்கம்போல தனது அலுவலகத்தில் ‘ஈ’ ஓட்டிக்கொண்டிருந்தான். அவ்வப்போது சபரிக்கு போன் செய்வதும் அவனுடைய நலத்தையும் தொழில் எப்படி போகிறது என்று கேட்பதும் அவனது வாடிக்கை.       மலையளவு நிரஞ்சனுக்கு நன்றிக்கடன் பட்டிருந்தாலும்.. உருகி உருகி பேசுபவனிடம் சபரியும் தொழிலைப் பற்றி ஒரு வார்த்தை கூறி விடமாட்டான் ஆரனின் அனுமதியின்றி..       என்னதான் இவன் வேலைக்கு சிபாரிசு செய்து இருந்தாலும்.. வேலை கொடுத்து நல்ல சம்பளத்தில் தன்னை வைத்திருக்கும்

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 15,16 Read More »

9A8B3136-EBBD-4B40-9760-418EA03AA4F5

26 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

26 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

பன்னிரண்டு மணியளவில் தான் வீராவும் நிகிதாவும் தூங்கி எழுந்து வந்தனர். வீரா வந்திருப்பதால் எல்லோரும் வீட்டிலேயே இருந்தனர்.ஆரா கூட பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டாள்.

வீரா நிகிதாவை மாடிபடியில் இருந்து கைபிடித்து கூட்டி வர.. பாட்டி தாத்தா இருவருக்கும் பார்த்தவுடன் சந்தோஷம். வெங்கட்டிற்கு சந்தோஷமாக இருந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் கெத்தாக உட்கார்ந்து இருந்தார்.

இருவரும் சாப்பிட ரோஹிணி பரிமாறினார். சாப்பிடும் போது வீரா நிகிதாவுக்கு நடு நடுவே தன் தட்டில் இருந்து சில கவளங்களை ஊட்ட.. நிகிதா தான்…

“மாமா எல்லோரும் நம்மளையே பார்க்கிறாங்க.. “என வெட்கப்பட…

“நீ எதுக்கு அவங்கள பார்க்கிற.. நீ சாப்பிடு.. எப்படி மெலிஞ்சு போயிருக்க பாரு.. ஒழுங்கா சாப்பிட மாட்டயா.. என் புள்ளையையும் சேர்த்து பட்டினி போட்டயா..”

“தோடா.. புள்ள இருக்கறதே தெரியாமா நாட்டை விட்டு ஓடி போனாரு.. இவரு பேசறாரு புள்ளயப் பத்தி..”

“ஏன்டி ஒரு சின்ன கேப் கிடைச்சிற கூடாதே.. நல்லா வச்சு செய்றடி..”

“நிகிதானா சும்மாவா.. விட்டுட்டு போனதுக்கு காலத்துக்கும் பேசுவேன்ல.. வசமா சிக்கினா கைமா பண்ணிட வேண்டியது தானே..”

“சரி.. சரி..தொண தொணனு பேசாம சாப்பிடு..” அவளை பேச விட்டால் தனக்கு தான் பாதகம் என.. அவளை அதட்டினான்.

“ம்க்கூம்” என நொடித்து கொண்டு சாப்பிட்ட.. எங்கே நிகிதா கோபத்தில் சண்டை போடுவாள் என நினைக்க.. என்ன பேசுகிறார்கள் என தெரியாத போதும் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள். வெங்கட்டை தவிர மற்றவர்கள் சந்தோஷப்பட.. வெங்கட்டோ என் பொண்ண ஏதோ செஞ்சு மயக்கி வச்சிருக்கான் என மனதோடு திட்டி கொண்டு இருந்தார்.

சாப்பிட்டு விட்டு வந்து ஹாலில் உட்கார்ந்தனர். வீரா மங்களம் பாட்டியின் அருகில் அமர்ந்து “அம்மாச்சி எப்படி இருக்கறிங்க..” என கேட்க… பாட்டி முகத்தை திருப்பி கொள்ள..

“அச்சோ என் பியூட்டிக்கு என் மேல கோபம் போல..”என பாட்டியின் தாடையை பிடித்து கொஞ்சினான்.

“போடா படவா..”கையை தட்டி விட.. கண்களில் லேசான கண்ணீர்.

பாட்டியை லேசாக அணைத்து..

“சாரி அம்மாச்சி..”

“ஏதோ போறாத காலம்.. விடு இனியாவது நல்லா இருங்க..”என்றார் கண்களை புடவை தலைப்பில் தொடைத்தவாறு..

வெங்கட்டோ நல்லா டிராமா பண்ணி எல்லாரையும் கவர் பண்ணிடறான் என எரிச்சல் பட்டார்.

சொக்கலிங்கம் “அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க வீரா..”என கேட்க..

“பார்க்கலாம் தாத்தா இப்ப தானே வந்திருக்கேன்..”

வெங்கட்டோ அலட்சியமாக… “அப்பா.. வேல தேடி இனி அங்கயும் இங்கயும் அலைய வேணாம் சொல்லுங்க… என் பொண்ணை வேணா வேல போட்டு கொடுக்க சொல்றேன்.. அவ சொல்றத கேட்டு ஒழுங்கா இருக்க சொல்லுங்க..”

வீராவை சொல்லவும் நிகிதாவிற்கு கோபம் சுருசுருவென வந்தது.

“ப்பா.. நீங்க அவர எப்படி அப்படி சொல்லலாம்.. என்னோடது எல்லாமே அவரோடது தான். அவருக்கு பிறகு தான் எனக்கு..இனி அவர மட்டமா பேசாதிங்க..”

மகளின் பேச்சில் வெங்கட் வாயடைத்து போய் பார்க்க.. தாத்தாவும் பாட்டியும் இவன் இப்படி பேசினா தான் அடங்குவான் என நினைத்தனர்.

அப்போது வீராவின் போன் அடிக்க… அழைத்தது விசாலா தான்.

“சொல்லுங்க ம்மா..”

“நீ தான் சொல்லனும்..ஊர் வந்து சேர்ந்தமே.. பெத்தவளுக்கு ஒரு தகவல் சொல்லுவோம்.. அது எல்லாம் இல்ல.. நானா போன் பண்ணி விசாரிக்க வேண்டியதா இருக்கு”

“ம்மா… லேட் நைட் தான் வந்தேன். வந்ததும் நிகிதாவ பார்க்க வந்துட்டேன்.. வரேன் மா..”

“அதானே புருஷன் பொண்டாட்டி சுமூகமா இருக்கறிங்கல்ல.. அப்புறம் எப்படி பெத்தவ நினைப்பிருக்கும்..பொண்டாட்டி பேசலைனா தான் அம்மா ஞாபகம் வரும்..” என நீட்டி முழக்க..

என்னடா இது என மண்டை காய்ந்தான் வீரா..எல்லோரும் அவனையே பார்த்து இருக்க.. அது வேற சங்கடமாக இருந்தது.வெங்கட்டோ முறைத்து கொண்டு இருந்தார்.

“யாரு உங்கம்மாவா… கொடு நான் பேசறேன்..” என பாட்டி வாங்கி..

“என்ன விசாலா..”

“ம்ம்ம்.. என்ன சொல்ல.. உங்க பேத்திக்கு எம்மவன கட்டி கொடுத்தா.. எம்மவன நான் மொத்தமா மறந்திருனுமா..”

“என்ன விசாலா பேசற.. புரிஞ்சு தான் பேசறியா..”

“என்னமா புரியாம பேசறேன்.. கடல் கடந்து வர மகன் வந்தானா இல்லையானு விடிய விடிய தூங்கமா பரிதவிச்சுட்டு இருக்கேன். வந்தேனு ஒரு சேதி சொல்லல.. அத கேட்டா குத்தமா..”

“சரி.. புரியுது.. இராத்திரில தொந்தரவு பண்ண வேணாம்னு நினைச்சிருப்பான். வெகு நேரம் பயணமில்லயா.. இப்ப தான தூங்கியே எழுந்தான்..சும்மா தொட்டதுக்கு எல்லாம் குத்தம் சொல்லாத.. வீராகிட்ட கொடுக்கறேன் பேசு..”

வீரா வாங்கி..”வரேன்மா.. கொஞ்ச நேரத்தில் வரேன்” என பேசி சமாதானம் செய்தான்.

பின்பு எல்லோரையும் பார்த்தவன்.. “நிகிதாவ நான் என் கூடவே ஊருக்கு கூட்டிட்டு போறேன்” என்க..

வெங்கட் உடனே..”பிரசவம் முடிச்சு தான் அனுப்ப முடியும்..”

“இல்ல… இனி நிகிதாவ விட்டு என்னால இருக்க முடியாது” என்றான் தைரியமாக..

ஐய்யோ இப்படி எல்லார் முன்னாடியும் வெட்கமே இல்லாமல் சொல்றாங்களே.. என நிகிதாவிற்கு தான் வெட்கமாகி போனது.

“அப்படி எல்லாம் அனுப்ப முடியாது. என் பொண்ணுக்கு அந்த வீட்ல வசதி பத்தாது. அட்டாச்டூ பாத்ரூம் இல்ல.. ஏசி இல்ல.. நான் என் பொண்ண எப்படி வச்சிருந்தேன்.. இப்ப எப்படி இருக்கா.. என் பொண்ணு நல்லா இருக்கனும்னு தான்.. வீட்டோட மாப்புளயா இருக்கனும்னு சொல்லி தான கல்யாணம் பண்ணி வச்சேன். அவ இங்க தான் இருப்பா.. அவ வேணும்னா.. நீயும் இங்க தான் இருக்கனும். நிகிதாவ அனுப்ப முடியாது”என்றார் அதிகாரமாக..

“என்னால இங்க இருக்க முடியாது. அதுக்காக எல்லாம் நிகிதாவ விட முடியாது. இனி நான் எங்க இருக்கேனோ அங்க தான் நிகிதாவும் இருப்பா..” என்றான் வீரா கோபமாக..

மறுபடியும் முதல்ல இருந்தா.. என வீட்டினர் நொந்து போய் பார்க்க..

நிகிதா தான் “ப்பா பேக்டரிய பார்க்க வேண்டாமா.. அதுவும் இல்லாம இவ்வளவு நாள் தான் நான் ஒரு பக்கம் அவரு ஒரு பக்கம் இருந்தோம்.. இனி அப்படி இருக்க எனக்கு இஷ்டமில்லப்பா.. நான் அவர் கூடவே போறேன். வேணும்னா உங்களுக்காக இரண்டு நாள் இருந்துட்டு போறோம் ப்ளீஸ்பா..”என்றாள் கெஞ்சுதலாக..

இப்ப எதுக்கு இவர்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கா.. என அவளை முறைத்தான்.

அவனை அமைதியா இருக்க சொல்லி இறைஞ்சுதலாக கண்ணாலயே சொல்ல.. அவன் முகத்தை திருப்பி கொண்டான்.

எப்பவும் மகள் இப்படி எல்லாம் கெஞ்சியதில்லை. அவள் கெஞ்சுவது பார்க்க முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது வெங்கட்கு..

“சரி பேபி.. நீ சொல்றதுனால அனுப்பறேன் ஆனா டெலிவரிக்கு அப்புறம் அஞ்சு மாசம் இங்க தான் இருக்கனும் .. அதுக்கு ஓகேனா.. இப்ப அனுப்பறேன்..”

இப்போ மாமனாரை முறைத்தான் வீரா..

“சரிங்கப்பா.. டெலிவரிக்கு இங்க வந்துடறேன்..” என்கவும்..

“ஓகே பேபி.. டூ டேஸ் இருந்துட்டு போ.. ஆனா உனக்கு அங்க ஏதாவது அன்ஈஸியா இருந்தா இங்க வந்துடனும்.. ஏதாவது வேணும்னாலும் எனக்கு கால் பண்ணு.. நான் வாங்கி தரேன்”

வீரா ஏதோ கோபமாக பேச போக.. நிகிதா கண்களால் வேண்டாம் என தடுக்க… வீரா எழுந்து மேலே தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

சொக்கலிங்கம் “உன் பொண்ணு வாழ்க்கை நாங்க பேசகூடாதுனு தான் நாங்க பேசல.. இருந்தாலும் வீரா எங்க பேரனா இருந்தாலும் இந்த வீட்டு மாபப்பிள்ள.. நீ அவனுக்கு அந்த மரியாதையை கொடுக்கனும் வெங்கட்..”

“ஆமாம் இது போல இன்னொரு தடவ பேசினா நல்லா இருக்காது பார்த்துக்கோ.. இந்த வீட்டுக்கும் அவன் தான் ஆண் வாரிசு. நாளபின்ன ஏதாவது நல்லது கெட்டதுனா.. அவன் தான் முன்ன நின்னு செய்யனும் அத முதல்ல தெரிஞ்சுக்கோ..” பாட்டியும் திட்ட..

வெங்கட் எதுவும் பேசவில்லை. முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தார்.

நிகிதா வீராவுக்கு ஜுஸ் எடுத்து கொண்டு மேலே செல்ல… அங்கே வீராவோ சோபாவில் அமர்ந்து வெங்கட்டை திட்டி கொண்டு இருந்தான்.

” நான் இவரு அக்கா மகன் தான.. நாங்க எப்படி.. எங்க வீடு எப்படி எல்லாம் தெரிஞ்சு தானே பொண்ண கொடுத்தாரு..என்னவோ நான் ஏமாத்தி கட்டிகிட்ட மாதிரி முறைச்சிகிட்டு இருக்காரு..”

“ஏன் என் பொண்டாட்டிய எனக்கு நல்லா வச்சுக்க தெரியாதா.. இவரு பெரிய மிட்டா மிராசா… இவரே வீட்டோட மாப்புள்ளயா வந்ததுனால தான் இந்த சொத்து இவருக்கு வந்துச்சு.. என்னவோ எல்லாம் இவரோட சுயசம்பாத்தியம் மாதிரி பேசறாரு..” என சரவெடியாக வெடித்து கொண்டு இருந்தான்.

நிகிதாவை பார்த்தவன் அவளை முறைக்க..

அவளோ அவனருகே வந்து ஜீஸை நீட்ட..

“இது பாரு.. அந்தாளு வீட்ல நான் எதுவும் சாப்பிட மாட்டேன். எடுத்துட்டு போ..” என்றான்.

“மாமா.. இது யாரு வீடு உங்க அம்மாச்சி வீடு.. யாரு பேசினது உங்க தாய்மாமா தான.. அவருக்கு ஏதோ கோபம்.. நீங்க கனடா போனது புடிக்கல அதான் விடுங்க..”

“அதுக்குனு.. எப்ப பாரு ஏட்டிக்கு போட்டியா பேசுவாரா..”

ம்கூம் இது சரிபடாது என நினைத்து நிகிதா பேச்சை மாற்றினாள்.

“மாமா எனக்கு கனடாவுல இருந்து எதுவும் வாங்கிட்டு வரலயா..”

“ம்ப்ச் வாங்கினேன் தான் ஆனா உனக்கு நிறைய வாங்க ஆசைப்பட்டேன். ஆனா டைம் இல்ல.. இரு வரேன்” என தன் லார்ஜ் சைஸ் டிராலியை தள்ளி கொண்டு வந்தான்.

அவள் முன் அதை திறந்து தன் பொருட்களை ஒதுக்கி விட்டு அவளுக்கு தான் வாங்கி வந்ததை எடுத்து கடை பரப்பினான்.

அவள் பயன்படுத்தும் இம்போர்ட் மேக்கப் பொருட்கள் அத்தனையும் அடங்கிய ஒரு கிட் இருந்தது. கூடவே ஒரு லேப்டாப் இருந்தது.

“இது தான் என்னால உனக்கு வாங்க முடிஞ்சுது.. இன்னும் நிறைய வாங்க நினைச்சு இருந்தேன். டைம் இல்ல..”

“நான் யூஸ் பண்ணும் ப்ராண்ட் உங்களுக்கு எப்படி தெரியும்”

“ஆராகிட்ட கேட்டேன் அவ தான் சொன்னா..”

“இந்த லேப்டாப் உங்களுக்கா.. ”

“இல்ல இது ஆராவுக்கு..” என்றான்.

“நான் இப்ப எல்லாம் இந்த மாதிரி மேக்கப் பண்றதில்ல மாமா..” என்றாள் அவன் தோளில் சாய்ந்து கொண்டு..

“நீ மேக்கப் போடுடி..அப்ப தான் கிக்கா இருக்கும். எனக்கும் எக்கச்சக்க மூடு வரும்..”

“ச்சீ பேச்ச பாரு. நான் என்ன அந்த மாதிரி பொம்பளயா…” என அவனின் முதுகில் அடிக்க..

அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு அணைத்து கொண்டு “ச்சே.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி.. மேக்கப் போட்டு நல்லா ப்ரஸ்ஸாவே உன்ன பார்த்துட்டு.. இப்படி அழுது வடிஞ்ச மாதிரி இருக்கறது எனக்கே புடிக்கல.. எப்பவும் போல நீ இருக்கற மாதிரியே இரு எனக்கு அதான் பிடிச்சிருக்கு..”

சரி என தலையாட்டிவளிடம்.. “ரெடியாகு நாம வெளிய போகலாம். நாம இரண்டு பேரும் சேர்ந்து எங்கயும் வெளிய போனதில்லைல.. போலாம் சீக்கிரம் வா..”

நிகிதா கிளம்பி வந்ததும் அவளை கூட்டி கொண்டு முதலில் கோயிலுக்கு தான் சென்றான். கோயிலில் தரிசனம் முடித்து விட்டு ஷாப்பிங் மாலுக்கு கூட்டிகிட்டு போனான்.

துணிக்கடைக்கு சென்றவன் புடவை சுடிதார் சில மெட்ர்னிட்டி கவுன்.. எல்லாம் வாங்கி விட்டு..அவள் இரவில் போடும் டாப்ஸ் மினி ஷார்ட்ஸ் பார்க்க..

நிகிதாவோ “மாமா.. நான் இப்ப எல்லாம் இது போடறதில்ல..”

“ஏன் பேபி டைட்டா இருக்கா.. வேணும்னா ப்ரீ சைஸ் வாங்கிக்கலாம்”

“அச்சோ மாமா.. நான் அங்க நம்ம வீட்ல இது எல்லாம் போடமாட்டேன்”

“நம்ம ரூம்ல மட்டும் போடு..” என்றவன் அவளை கேட்காமல் அவன் என்ன எல்லாம் வாங்க ஆசைப்பட்டானோ.. அது எல்லாம் வாங்கினான்.

புட் கோர்ட்கு கூட்டி போய் அவளுக்கு பிடித்த உணவு வாங்கி கொடுத்து சாப்பிட்டு வீடு வரும் போது இரவாகிவிட்டது.

விசாலா இரவாகியும் மகன் வராததால் அவனுக்கு அழைத்து விட்டார்.

“என்னடா.. எங்க வந்திட்டு இருக்க..”

“ம்மா.. நான் இன்னும் கிளம்பலை.. இரண்டு நாள் இருந்துட்டு வரேன்”

“ஏன்டா பொண்டாட்டிய பார்தத்தும் அம்மா மறந்திடுமா.. நான் தான் மகன கண்ணுல காணாம கிடந்து தவிக்கறேன்” என அழுக..

“ம்மா… மனஷன சாவடிக்காத.. உன் தம்பி ஒரு பக்கம்.. நீ ஒரு பக்கம் இம்சை பண்றிங்க.. வா வானு சொன்னிங்க.. வந்தா ஆளாளுக்கு பந்தாடறிங்க.. இரண்டு நாள்ல வந்துருவேன் வை..” என கோபத்தில் போனை தூக்கி படுக்கையில் விசிறினான்.

“மாமா.. என்னாச்சு.. எதுக்கு இவ்வளவு டென்ஷன்..”

அவன் சொல்லவும்.. நிகிதா “மாமா அவங்களுக்கு குடும்பம் தான் உலகம். அதுலயும் உங்க மேல பாசம் ஜாஸ்தி.. அவங்க அப்படி தான் மாமா.. கொஞ்சம் பாசமா நடந்துகிட்டா போதும்.. அவங்க ப்ளாட்டாயிடுவாங்க.. ப்ராப்ளம் சால்வ்டு தட்ஸ் ஆல்..”என்று இரு கைகளையும் தட்டி உதறி அவனை பார்த்து சிரித்தாள்.

“அடியேய்…. மாமியார்ங்கற பயமில்ல..”

“இப்ப பாருங்க..”என அவள் போனை எடுத்து விசாலாவிற்கு கூப்பிட…

மகன் வரவில்லை என்ற கடுப்பில….

“ஹலோ..” என்றார் வெறுப்பாக..

“அத்தை நான் நிகிதா பேசறேன்..”

“தெரியுது சொல்லு..”

“உங்க மகன பாருங்க அத்தை.. அத்தைய முதல்ல போய் பார்த்துட்டு வாங்கனு சொன்னா.. உன்னையும் கூட்டிகிட்டு தான் போவேன். எங்க அம்மாவ உங்கப்பா சண்டை போட்டாராம்ல.. அதனால இந்த வீட்ல நீயும் இருக்ககூடாது வா போலாம்னு சொல்றாரு..இரண்டு நாள் டைம் அதுக்குள்ள பொட்டி படுக்கை எல்லாம் கட்டற.. அப்படினு சொல்லிட்டாரு அத்தை..”என்றாள் சோக பாவனையில்

“அப்படியா.. சொன்னான்..”என்று விசாலா ஆர்வமாக கேட்க…

“ஆமாம் அத்தை எங்கப்பாகிட்டயே சொல்லிட்டாரு.. பிரசவம் முடிச்சு தான் அனுப்புவேன்னு அப்பா சொல்ல… எல்லாம் உங்கள விட எங்கம்மா அருமையா பிரசவம் பார்ப்பாங்க.. அப்படினுட்டாரு அத்தை..”

“ஆமாம் கண்ணு.. நீ வா நான் பார்த்துகிறேன்.. என் தம்பி என்னமோ ரொம்ப தான் துள்ளிகிட்டு திரியறான்..”

“சரிங்கத்தை இரண்டு நாள்ல வந்திடறோம் எங்கம்மாவுக்கு மதிப்பில்லாத இடத்துல நான் சோறு தண்ணி சாப்பிடமாட்டேன்னு சொல்லி இன்னைக்கு வெளில தான் சாப்பிட்டாரு அத்தை..”

“அவன்கிட்ட கொடு கண்ணு.. நான் பேசறேன்..”

அதுவரை அவள் நடிப்பை பார்த்து ஆவென வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்தான் வீரா.

“அத்தை உங்ககிட்ட பேசனுமாம்..” என போனை நீட்ட..

வாங்கியவன் “சொல்லுங்கம்மா.. ”

“ஏசாமி அப்படியா சொன்ன…”

அவள் ஏகப்பட்டதை சொன்னாள். அதில் எதைனு கண்டேன்.. என யோசித்து மொத்தமாக…

“ஆமாம் ம்மா..” என்றான்.

“உங்க மாமா அப்படி தான் கொஞ்சம் திமிரு புடிச்சவன்..அதுக்காக எல்லாம் வெளில சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காத கண்ணு.. அது யாரு வீடு உங்க அம்மாச்சி வீடு.. உனக்கு அங்க எல்லாம் உரிமையும் இருக்கு.. இரண்டு நாள் இருந்துட்டு நிகிதாவ கூட்டிகிட்டு வந்துடு.. நான் பத்திரமா பார்த்துக்கறேன்.. வைச்சிடவா சாமி..” என்று வைத்துவிட..

வீரா நிகிதாவிடம் “என்னடி எங்கிட்ட அப்படி பேசுச்சு எங்கம்மா.. நீ அவுத்து விட்ட பொய்க்கு இப்படி மயங்கிடுச்சு..” என்றான்.

“மாமா.. உங்களுக்கு யார எப்படி டீல் பண்றதுனே தெரியல.. எப்படி நான் போட்ட பிட்டு நல்லா வேல செஞ்சுதா..அக்கா தம்பி இரண்டு பேரையும் அப்படியே தட்டிவிட்டு போய்கிட்டே இருக்கனும்..” என்றாள்

“அடிப்பாவி.. நல்லா பொழைச்சுக்கவடி..” என வாயில் கைவைத்து பார்த்து கொண்டு இருந்தான்.

அவள் குலுங்கி சிரிக்க..

“ஏய் எங்காவது வலிக்க போகுதடி..”வேகமாக அருகில் வந்து அணைத்து கொண்டவன்.. செல்லமாக அவள் நெற்றியில் முட்டி..

“நிஜமா.. சொல்றேன்டி.. நான் செஞ்ச காரியத்துக்கு வேற ஒருத்தியா இருந்தா..டைவர்ஸ் வாங்கிட்டு போயிருப்பா.. நீயா இருக்கவும் என்னை மன்னிச்சு வாழ்க்கை கொடுத்திருக்க.. லவ்யூ டி பொண்டாட்டி..” என நெற்றியில் முத்தம் வைக்க..

நிகிதா தன் விரல் தொட்டு.. கண் கன்னம் உதடு கழுத்து என காண்பிக்க.. அவள் விரல் தொட்ட இடங்கள் எல்லாம் இவன் இதழ் தொட்டு மீள… அங்கு ஒரு மீளா காதல் யுத்தம் அரங்கேறியது.

26 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

3B049C0F-87EA-4532-8169-ABEEFC4CF95B

25 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

25 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

வீராவின் நெஞ்சில் சாய்ந்து நிகிதா இன்னும் தேம்பி தேம்பி அழுது கொண்டு இருக்க…

“போதும் பேபி.. அழுதழுது உடம்புக்கு ஏதாவது இழுத்து வைச்சுக்காத..” என சமாதானம் செய்தான்.

அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை துடைத்து விட்டு முகத்தை கைகளில் ஏந்தி முகம் முழுவதும் மெல்ல.. மெல்ல.. முத்தமிட்டு… ஒவ்வொரு முத்தத்திற்கு இடையே “சாரி பேபி..” “லவ்யூ மில்கி..” என சொல்லி கொண்டே முத்தமிட..

நிகிதாவோ சிறு குழந்தை போல இன்னும்உதட்டை பிதுக்கி தேம்பி கொண்டு இருக்க…
அந்த ரோஜா நிற உதட்டை முழுவதுமாக இழுத்து தன் வாயுள் அதக்கி சுவைக்க.. சுகம் தாளாமல் அவனின் பிடரி முடியில் கைகளை விட்டு இறுக்கி பிடித்து.. கண்கள் சொருக.. கணவனின் முத்தத்தில் ஆழ்ந்து தன்னை மறந்து லயித்திருந்தாள்.

அப்பப்பா எத்தனை மாத பிரிவுக்கு பிறகு கிடைத்த முத்தம்.. இருவரும் மற்றவரின் அருகாமையில் இத்தனை நாள் பிரிவாற்றமையை தணிக்க போராட.. வீராவின் கைகளோ அவள் உடலை தொட்டு தடவி.. அழுத்தி.. என தன் தாபங்களை தீர்க்க முயல… இருவருக்குமே தங்கள் துணையின் தேவை உணர்ந்து சேவையை தொடரும் முன் கதவு தட்டும் ஒலியில் பிரிந்தனர்.

வீரா எழுந்து சென்று கதவை திறக்க.. அங்கு கொஞ்சம் சங்கடத்துடன் ரோஹிணி நின்று கொண்டு இருந்தார்.

அவர் கையில் ஒரு ட்ரே இரண்டு பால் டம்ளரும் இரண்டு கண்ணாடி கிண்ணங்களில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு தேன் கலந்திருந்த பழ கலவைகளும் இருக்க..

“நீங்க சாப்டிங்களா என்னன்னு தெரியல மாப்ள.. அதான் இதை நிக்கி பேபிக்கும் கொடுத்து விட்டு நீங்களும் சாப்பிடுங்க..” என சொல்லி கொடுக்க…

அதை வாங்கி கொண்டு கதவை அடைத்து விட்டு வந்தவன் அவளின் அருகில் அமர்ந்து ஒரு கிண்ணத்தை எடுத்து பழத்தை ஒவ்வொரு ஸ்பூனாக நிகிதாவிற்கு ஊட்ட.. கணவனை காதல் பார்வை கொண்டு ரசித்து கொண்டே சாப்பிட்டாள். அவனும் தன் மனைவியை கண்களால் அளந்து கொண்டு தான் இருந்தான்.

“சரியா சாப்பிடவே மாட்டயா.. பாரு எப்படி இருக்க.. இந்த டைம்ல வெயிட் போடனும் அமுல் பேபி.. நீ இருக்கற வெயிட்ல இருந்து குறைச்சிருக்க.. நீயும் குட்டி பேபியும் ஹெல்தியா இருக்க வேண்டாமா..” என்றான் கவலையாக…

“இப்ப தான் நீங்க வந்துட்டிங்கல்ல மாமா.. நீங்க தினமும் இப்படி ஊட்டி விடுங்க.. நான் நல்லா சாப்பிடறேன்..” என்றாள் கொஞ்சலாக…

அவன் ஊட்ட…ஊட்ட.. இவள் இத்தனை நாட்களாக அவனிடம் பகிர முடியாத மனதில் அடைத்து வைத்திருந்த அத்தனை கதைகளையும் அளந்து கொண்டு இருந்தாள். அந்த பேச்சு முழுவதும் அவனை பிரிந்த ஏக்கங்கள் மட்டுமே தெரிய… வீராவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அவனின் கண்ணீரில் பதறி போய் “என்னாச்சு மாமா… ஏன் அழுகறிங்க…”

“நான் இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சா…” என்றான் கரகரப்பான குரலில்..

இப்போது அவள் கண்களிலும் கண்ணீர் கோடுகள்.. “ம்ம்ம ரொம்ப.. ரொம்ப.. கஷ்டமா இருந்துச்சு மாமா.. நைட்ல உங்க நெஞ்சுல தலை வச்சு படுக்காமல் தூக்கம் வரல.. எவ்வளவு நேரம் முழிச்சிகிட்டே படுத்திருப்பேன் தெரியுமா… அப்புறம் பேபி பார்ம் ஆனதை உங்கள ஹக் பண்ணி சொல்லனும் ஆசைப் பட்டேன். உங்க பேபி காலைல எழுந்திருக்கும் போதே ரொம்ப படுத்தும் தெரியுமா.. தலைசுத்தலா இருக்கும்..எழுந்து நடக்கவே பயமா இருக்கும். சுவற்றை பிடித்து கொண்டு மெல்ல நடந்து ரெஸ்ட் ரூம் போவேன். அப்ப எல்லாம் நீங்க தாங்கி பிடிச்சிகிட்டு கூட்டிட்டு போகனும்னு ஆசைப்பட்டேன்”

“சம் டைம்ஸ் வீட்டு சாப்பாடு பிடிக்காது.. ஹோட்டல்ல ஏதாவது வாங்கி சாப்பிட்டா நல்லா இருக்கும்னு தோனும்.. மாமா சொன்னா வாங்கி தந்திருப்பாங்க தான். ஆனா எனக்கு நீங்க வாங்கி கொடுத்து சாப்பிடனும்.. என்ன செய்ய..அப்ப எல்லாம் சரியா சாப்பிட மாட்டேன்”

“எல்லாரும் அவங்க ஹப்பியோட ஹாஸ்பிடல்கு வருவாங்க.. அதை பார்த்து ஏக்கமா இருக்கும்”

“பேபியோட பர்ஸ்ட் மூவ்மெண்ட்ட உங்க கையை என் வயிற்றில் வைத்து சொல்லனும்னு நினைச்சேன்.. ஸ்கேன்ல பேபியோட கைகால் குட்டியா க்யூட்டா இருந்துச்சு தெரியுமா.. இரண்டு பேரும் சேர்ந்து பார்க்கனும் ஆசையா இருந்துச்சு..”

“வளைகாப்புல நான் நீங்க இல்லாம தனியா உட்கார்ந்து இருந்தேன் தெரியுமா.. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி பேசினாங்க..” அவள் பேச பேச.. அவன் வாயடைத்து போயிருந்தான்.

அவளின் ஆசை ஏக்கங்கள் எல்லாம் அவன் மனதில் ஆசிட்டாக இறங்கி அவனை சுட்டு பொசுக்கியது. அவளை தூக்கி தன் மடியில் அமர்த்தி கொண்டு பின்னிருந்து அணைத்து அவள் தோளில் முகம் புதைத்து அழுது தீர்த்தான்.

அவன் தலைமுடியை கோதி… “மாமா அழுகாதிங்க.. நீங்க அழுதா எனக்கும் அழுகை வருது.. நான் அழுதா.. நம்ம பேபி கஷ்டப்படும்..”

இனியும் அவளை கஷ்டப்படுத்த கூடாது என நினைத்தவன்… “நான் இனி அழுகலை..” என கண்களை அழுந்த துடைத்தவன்.. “வா வந்து சாப்பிட்டு தூங்கு..”

“அச்சோ மாமா.. பாருங்க நீங்க பேசிகிட்டே உங்க பவுல் ப்ருட்ஸையும் எனக்கே ஊட்டி விட்டுருக்கறிங்க.. கொஞ்சுண்டு தான் இருக்கு..” சதங்கையாக சிரிக்க.. அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான். இனி இந்த சிரிப்பு வாடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்தான்.

மீதமிருந்த பழங்களையும் அவளுக்கே ஊட்ட போக.. தடுத்து “நீங்க சாப்பிடுங்க மாமா..”

“நீ சாப்பிடு.. நான் அப்புறம் சாப்பிடறேன்..”

“நான் சாப்பிட்டா.. உங்களுக்கு இருக்காது. அப்புறம் எப்படி சாப்பிடுவிங்க..” “சாப்பிடுவேன் பாரு..” என ஊட்டி விட.. புரியாமலேயே சாப்பிட்டாள். எப்படி என புரிய வைத்தான் அவள் கருவாயன்.

ப்ருட்ஸை விழுங்கும் முன் நிகிதாவின் வாயோடு வாய் வைத்து உறிஞ்சி இழுத்து தனது வாய்க்கு இடம் மாற்றினான். அவளை விடுத்து கண்களை மூடி லயித்து.. கன்னத்தில் அதக்கி சிறிது சிறிதாக ரசித்து ருசித்து புசித்தான்.

அவனை ரசனையை காதலாக பார்த்து கொண்டு இருந்தாள். கடைசி விழுதையும் விழுங்கி விட்டு சப்பு கொட்டி” எப்பூடி மாமனோட பெர்மான்ஸ்..”என்றான் மெச்சுதலாக…

“க்கூம்.. கொஞ்சம் லேட் பிக்கப் தான்..” என்றாள் உதட்டை சுழித்து..

“அடி கழுதை.. உனக்கு கொழுப்பு கூடி போச்சு..”

“ஏன் என் கொழுப்பை அடக்க போறிங்களா..” என கேட்க..

இது கல்யாணியோட டைலாக் ஆச்சே.. என யோசித்தவன்.. ச்சே இப்ப எதுக்கு அவ நினைப்பு.. என் அமுல் பேபி இருக்கும் போது.. என கல்யாணியின் நினைவு உதறி தள்ளியவன்.. கொஞ்சம் யோசித்து இருந்தால் கண்டுபிடித்து இருக்கலாம்.

“மாமா.. என்ன சைலன்ட்டாகிட்டிங்க..”

“என் மேல இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சா..”

“கோபம் இல்லைனு சொல்லமாட்டேன். ஆனா உங்களை பார்த்தும் கோபத்தை மீறிகிட்டு லவ் தான் வந்துச்சு..அது ஒரு ஓரமா இருக்கு.. அப்பப்ப தலை காட்டும். நீங்க பொறுத்துக்க தான் வேணும்..” என்றாள்.

அவளுக்காக.. அவளின் அன்புக்காகவும் எதையும் தாங்கி கொள்ளவும்..எதுவும் செய்யவும் முடிவோடு தான் விமானமே ஏறினான். “சரிடி மில்கி அண்ட் சாரிடி ..”

“ப்ச்ச் அத விடுங்க..இருங்க வரேன்” என்று எழுந்து சென்றாள். வயிற்றின் மேல் ஒரு கை வைத்து தேர் போல அசைந்து சென்றாள்.

அவள் நடையை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்துச்சு… எப்பவும் நிகிதா வேக நடை தான். இன்று தன் மகவை தாங்கும் வயிற்றை சற்றே முன்னே நிமிர்த்தி இடுப்பை தாங்கி அவள் நடக்கும் நடை கவிதையாக இருந்தது.

ஒவ்வொரு நிமிடமும் அவளோடு ரசித்து அனுபவித்து வாழ வேண்டும் என தீர்மானம் செய்தான். போதும் அவளும் தானும் பட்ட கஷ்டங்கள் என நினைத்தான்.

திரும்பி வந்தவள் கைகளில் அழகான கண்ணாடி வளையல்கள் அடங்கிய ஒரு அட்டை பெட்டி இருந்தன.அதை அவன் கையில் கொடுத்து..

“எனக்கு போட்டுவிடுங்க மாமா.. ”

“இதுல ஒரு டஜன் வளையல் இருக்கும் போல..” என்றான் அவள் கைகளில் நிறைந்திருந்த வளையல்களை பார்த்து கொண்டே….

“ஆமாம் மாமா.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு போட்டு விடுங்க..”என்று அவன் முன் இரண்டு கைகளையும் நீட்டி….

இரண்டிரண்டு வளையல்களாக முடிந்த வரை அவள் கைகளில் போட்டு விட்டான் மணிகட்டில் இருந்து முழங்கை வரை வளையல்களாக நிறைந்திருக்க.. அவள் கைகளில் இருந்த வளையல்களை முன்னும் பின்னும் மெதுவாக நகர்த்தி கொண்டே… நிகிதாவின் கண்களை பார்த்து ..

“அமுல் பேபி.. மாமன் மேல கொஞ்சம் கருணை காட்டறது..”

“எதுக்கு கருணை காட்டனும்..”என்றாள் உதட்டை மடித்து சிரிப்பை வாய்க்குள் அடக்கியவாறே…

அவள் சிரிப்பை அடக்குவதை கண்டு கொண்டவன் “ம்ப்ச்.. சும்மா கலாய்காதடி..”

“ஏன் அந்த கல்யாணி மட்டும் தான் கலாய்கனுமா…”

“ஏய்… அவ எனக்கு ஜஸ்ட் பிரண்டு மட்டும் தான் எத்தனை தடவ டி சொல்றது”

“ப்ரண்டா.. கேர்ள் ப்ரண்டா..”

“ப்ரண்ட் மட்டும் தான்டி..”

“ஓஓஓ… ப்ரண்ட் கூட தான் ரிலேஷன்ஷிப் ல இருப்பாங்களா..”

“அடியேய்… பல்லப் பேத்துடுவேன் பார்த்துக்கோ..”

“பேமிலி டைலாக் ரிட்டர்ன் பேக்..” என முனுமுனுத்தவள்… ஈஈஈ என பல் வரிசையை காட்டி…

“பேத்திடுவிங்களா.. எங்க பார்க்கறேன்.. அந்த கல்யாணி இல்லீகல் ரிலேஷன்ல இருக்கோம்னு எங்கிட்டயே சொன்னா..அவ பல்ல பேத்திட்டிங்களா.. என் பல்ல பேத்துடுவாராம்..”

“நான் அவள பார்த்தது கூட இல்லைடி.. அவ கூட போன்ல மட்டும் தான் பேசியிருக்கேன்..”

“அவகிட்ட போன்ல சிரிச்சு சிரிச்சு பேசினிங்களாம்.. என்கிட்ட அப்படி தான் பேசினிங்களா..”

“நீ தான் போன் பண்ணினா ஒன்னா பேச மாட்டே.. இல்லைனா சண்டை போடவே போன் பண்ணுவ…”

“ஓஹோ.. அப்ப நான் சண்டைகாரியா.. அவ எப்படி சிரிச்சு சிரிச்சு பேசி இந்த கருத்த மச்சான குளு குளுனு வச்சுப்பாளோ..”

“ஏன்டி.. ஏன்… என்னை பார்த்தா பாவமா இல்லையா.. உன் கால்ல வேணாலும் விழுகறேன்.. விட்டுடு..”

சம்மணமிட்டு அமர்ந்து இருந்தவள் இரண்டு கால்களையும் படுக்கையில் நீட்டி ஒய்யாரமாக கால்களை ஆட்டியவாறே..

“ம்ம்ம்” என்றாள் கால்களை கண்களால் ஆட்டி..

“அடிப்பாவி.. புருஷனயே கால்ல விழுக சொல்ற..” என்றான் உல்லாசமாக.. அவளின் செய்கை அவனுக்கு சிரிப்பை வரவழைத்திருக்க..

“நான் சொல்லவே இல்ல நீங்க தான் சொன்னிங்க.. ம்ம் ஆகட்டும்… சீக்கிரம் ஆகட்டும்” என்றாள் அவனை பார்த்து கண்ணடித்து…

படுக்கையிலேயே சாஷ்டாங்கமாக அவள் கால்களில் விழுந்து அவள் கால்களை பிடித்து..”சாரிடி அமுல் பேபி..” என்றான் அடி மனதில் இருந்து மன்னிப்பு கேட்டான்.

வீரா கால்களில் விழுவான் என எதிர்பார்க்காதவள்.. அவனின் செயலில் மனம் குளிர்ந்து போய்.. அவனை இரண்டு கைகளையும் விரித்து வாவென தலையாட்டினாள்.

அப்படியே பிரண்டு வந்து அவள் மடியில் படுத்தவன் அவளின் நைட் டிரஸ் சட்டையை தூக்கி.. அவள் வயிற்றில் முத்தம் கொடுத்தான்.

“சாரி குட்டி பேபி.. சாரி.. அப்பாவ மிஸ் பண்ணினிங்களா.. நீயும் அம்மாவும்.. சாரி பேபி” என்று அழுந்த முத்தமிட்டவன் அவளின் வயிற்றில் தன் முகத்தை மென்மையாக புரட்ட..

“மாமா..” என சிணுங்கி அவனின் தலைமுடியை பிடித்து இழுக்க.. நிமிர்ந்து அவளின் முகம் பார்த்து “ப்ளீஸ்டி மில்கி” என்றான் கெஞ்சுதலாக..

கணவனின் கெஞ்சுதலில் அவனின் தேவையறிந்து முகம் சிவக்க.. மெல்ல தலையசைத்து சம்மதம் சொன்னாள். அவனாகவே விரும்பி கேட்பது இது தான் முதல் முறை. பெண்ணவளுக்கோ மறுக்க தோன்றவில்லை.

மனையாளின் சம்மதத்திற்காக அவள் முகம் பார்த்திருந்தவன்.. அவள் முகச் சிவப்பும் மெல்லிய புன்னகையும் பல மாதங்களுக்கு பிறகு நேரில் காண.. ஆணவனின் ஆசை வீறு கொண்டு எழுந்தது.

வேகமாக மடியில் இருந்து எழுந்து அவள் உதடுகளோடு தன் உதடுகளை கோர்த்தான்.பல நாளுக்கு பின்னான அவள் தேனமுதம் ருசித்தவனோ போதை உச்சிக்கு ஏறியது.

உதட்டை விடுத்து கன்னம் கண் என நுனி நாக்கால் ஊர்வலம் போக… அவன் நாக்கின் சில்லிப்பு இவளுக்குள் சிலிர்ப்பை உண்டாக்க… காதுமடலை தீண்டியவன் மெல்ல பற்களால் காதை கடிக்க..

அம்ம்மா.. ஆஆ.. ஆடவனின் நாக்கு நுனி இவ்வளவு மாயங்கள் செய்யுமா.. உடல் சிலிர்த்து ஒரு நொடி அதிர்ந்து அடங்கியது. பின் கழுத்தில் முன்னேற… தாள முடியாமல் கணவனை முன்னுக்கு இழுத்து அவன் நெஞ்சில் வலிக்க ஒரு கடி கடிக்க…அது கூட அவனுக்கு சுக வேதனை தான்.

கோதையை பின்பற்றி மாயவனும் தன் மனம் கொய்தவளின் உடல் எங்கும் செல்ல கடி வைக்க.. அனலில் இட்ட புழுவாய் துடித்தாள். துடித்தவளின் துடிப்பை அடக்கும் வித்தைகளை எல்லாம் தத்தையிடம் மேற்கொள்ள…

காமனின் காட்டில் விடிய விடிய மன்மத மழை. நிகிதா களைத்து போய் கண்கள் சொருகும் நிலையில் தான் விடுவித்தான். அவளை விடுத்து அருகில் படுத்தவன் அணைத்து படுத்தவன் மேல் அவளின் மேடிட்ட வயிறு இடிக்க.. அப்போது தான் நிலை புத்தியில் உரைக்க..

“ரொம்ப கஷ்டபடுத்திட்டனா.. ஏதாவது பண்ணுதா..”என மெல்ல கேட்க..

இல்லை என மறுப்பாக தலை அசைத்து.. மென்னகை புரிய… சோர்வுடன்அந்த சிரிப்பில் கலைந்த ஓவியமாக தெரிந்தாள்.

நிமிடத்தில் அவள் உறங்கி விட.. வீராவோ மேற்கொண்டு என்ன செய்வது … நிகிதாவை விட்டு தாமரையூர் செல்ல முடியாது. அதற்காக அவளோடு இங்கேயே இருக்கவும் முடியாது. என்ன செய்வது என்று தூங்காமல் யோசித்து கொண்டே படுத்திருந்தான்.

தாமரையூரில் விசாலா அய்யாவுவிடம்… “வீரா பண்ணிரண்டு மணிக்கு மேலசென்னை வந்திருந்துவானு சொன்னிங்க.. இப்ப மணி நாலாகுது இன்னும் காணோம்.. ஒருவேள ஏரோபிளான் லேட்டா வந்திருக்குமோ..”

“அவன் எல்லாம் சரியான நேரத்துக்கு வந்துட்டான்.. மருமகள பார்த்துட்டு தான் வருவான்..”

“பெத்தவ நான் தவிச்சுகிட்டு கிடக்கேங்.. என்கிட்டே வந்து முகத்தை காமிச்சிட்டு போயி பொண்டாட்டிய பார்க்க மாட்டானா.. என்ன தான் அருமபெருமையா பெத்து வளர்த்தாலும்.. பொண்டாட்டி வந்துட்டா பெத்தவள தூக்கி எறிஞ்சிறானுங்க..”என புலம்ப…

“எதுக்கு இப்ப ஒப்பாரி வைக்கிற.. நான் எப்படி உன்கிட்ட மயங்கி கிடக்கறேன்.. அப்புறம் எம்மவனும் என்ன மாதிரி தான இருப்பான்.. ”

“க்கும் நீங்க மயங்கிட்டாலும்.. இப்ப வரவளுக எல்லாம் நல்லா புருஷன முந்தானல முடிஞ்சு வைச்சுகிறாளுக..”

“சொந்த தம்பி மவ கட்டினதுக்கே இந்த பாட்டு பாடற.. இன்னும் பிறத்தில கட்டிட்டு வந்திருந்தா.. போலீஸ் ஸ்டேஷன் போறளவுக்கு பிரச்சினை இழுத்து வச்சிருப்ப..”

“ஏதேது நீங்களே புடிச்சு கொடுத்துருவிங்க போலருக்கு.. விசா.. விசானுட்டு வருவிங்க தான.. வெளிய தள்ளி கதவ சாத்திடறேன்”

“நான் என்னடி பண்ணேன்.. நானே சிவனேனு இருக்கேன்..”

“யாரு நீங்க.. சும்மா வளவளனு பேசாம போன போட்டு உங்க மவன எப்ப வரானு கேளுங்க..”

“இப்பவே வா.. வேணான்டி இன்னும் கொஞ்சம் விடியட்டும்” என சொல்லி இவர் திரும்பி படுத்து தூங்கிவிட.. விசாலா தான் தூங்காமல் புலம்பி கொண்டு இருந்தார்.

வீராவோ நிகிதாவோடு ஊருக்கு செல்லவேண்டும் என நினைத்திருக்க.. வெங்கட்டின் முடிவு என்னவாக இருக்கும் என தெரியவில்லை. விசாலாவோ மகன் தன்னை பார்க்க வரவில்லை என மருமகளையும் சேர்த்து வசை பாட.. அடுத்த நிலவரம் கலவரமாக இருக்கும் போல..

25 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

1000000664

என் மோகத் தீயே குளிராதே 30

அத்தியாயம் 30   “அர்ஜுன்.. என்னதிது குழந்தை மாதிரி மடில படுத்துட்டு இருக்கீங்க? அகிலும் ஹாசினியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.. எழுந்திரிங்க..”   “ப்ச்.. கொஞ்ச நேரம் தான்மா.. காலைல இருந்து சர்ஜரில நின்னு நின்னு.. ஒரே அலுப்பா இருக்கு.. உன் மடியில கொஞ்ச நேரம் படுத்து கண்ணை மூடுனா.. பழைய எனர்ஜி திரும்ப வந்துடும்..”   “ஏன் ஒரு மாதிரி சோர்ந்து போயிருக்கீங்க? முகமெல்லாம் வாட்டமா இருக்கு?”   “ப்ச்.. இன்னைக்கு ஒரு ஆக்ஸிடென்ட்

என் மோகத் தீயே குளிராதே 30 Read More »

0CB83387-1EFC-49A1-9CEA-04D834C7F0A4

24 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

24 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

தறி பட்டறை ஆரம்பித்து ஒரு மாதம் முடிந்திருந்தது. நிகிதாவின் உதவியில்லாமல் பட்டறையை நிர்வாகம் பண்ண கற்று கொண்டார் அய்யாவு. அதிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர் தானே.. இன்றைய டெக்னாலஜிக்கு தன்னை எளிதாக மாற்றி கொண்டார்.

நிகிதா புது புது டிசைன்களை உருவாக்க.. அவள் டிசைனில் உருவாக்கிய புடவைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. டிசைன் செய்து கொடுத்தால் மற்றவற்றை அய்யாவு பார்த்து கொள்ள.. பேக்டரி வேலையில் முழுவதாக மூழ்கி போனாள்.

இதோ பேக்டரியும் திறப்பு விழாவிற்கு தயாராகி விட.. இந்த முறையும் வீரா வரவில்லை. வருவதறக்கான சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டான்.

தங்கள் மகவு உலகை பார்க்கும் முன் நிகிதாவை தான் பார்க்க வேண்டும். சூழ் கொண்ட வயிற்றை தொட்டு தடவி அதன் துடிப்பை உணர்த்திட ரொம்பவே ஆசை கொண்டான். ஆசை என்பதை விட ஒரு வெறி என்றே சொல்லலாம். தன் குழந்தை உருவான தருணம் முதல் அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் அசைவையும் அவளின் மணி வயிற்றை தடவி துடிப்பு உணர்ந்து அனுபவிக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவன் மனதை அரித்து கொண்டு இருந்தது.

அதனால் அவனின் ப்ராஜெக்டை முடிக்க இரவு பகலாக வேலை செய்து கொண்டு இருந்தான்.ஒரு வருஷ கான்ட்ராக்ட்டில் சென்று இருந்தவன்.. நிகிதாவின் வளைகாப்புக்கு முன் வந்திட வேண்டும் என்ற எண்ணம். அதனால் முன்னிலும் முனைப்பாக வேலையை செய்தான்.

வீரா வரவில்லை என்பது குடும்பத்தினருக்கு வருத்தம் தான். வந்து திறப்பு விழா முடித்து விட்டு போக சொன்னார்கள். ஆனால் வந்தால் நிகிதாவை விட்டு செல்ல முடியாது என்பதால் வேலையை முடித்து கொண்டு மொத்தமாக வந்திட வேண்டும் என உறுதியாக இருந்தான். நிகிதாவிற்கு வருத்தம் இல்லை அவளுக்கு தெரியுமே அவள் கணவனின் எண்ணம்.

திறப்பு விழாவை வெங்கட் ஆடம்பரமாக செய்து இருந்தார். மத்திய தொழில் துறை மந்திரி ரிப்பன் கட் பண்ணி திறந்து வைக்க.. மங்களம் பாட்டி விளக்கேற்றி வைக்க.. தமிழக மந்திரிகள் இருவர் அரசு அதிகாரிகள் என தொழிலை சுமூகமாக நடத்துவதற்கான சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அத்தனை பேரையும் அழைத்து சிறப்பாக கவனித்து… ஆர்ப்பாட்டமாக செய்தார்.

இன்றும் ஆரா எல்லாவற்றையும் வீராவுக்கு லைவ்வாக காண்பிக்க.. வீரா மலைத்து போனான் ஒரு தொழிலை நடத்த இத்தனை செய்ய வேண்டுமா என…

விழா முடிந்ததும் எப்பவும் போல் மனைவியை சைட் அடித்து.. அவளிடம் கொஞ்சல் மொழி பேசி.. அவளின் நக்கல் பேச்சையும் ரசித்து விட்டு தான் போனை வைத்தான்.

அதற்கு பிறகு வெங்கட் எல்லாம் ஜெட் வேகம் தான். பேக்டரி நிர்வாகத்திற்கு எல்லா துறைகளிலும் திறமையான நபர்களை தேர்வு செய்தார்.லேபர்ஸ் அக்கம் பக்கம் ஊரில் இருந்த மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்தார். தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய தன் ஜெனரல் மேனஜர் ராகவாச்சாரியை நிகிதாவிற்கு ஜெனரல் மேனஜராக நியமித்தார். ஐம்பதின் தொடக்கத்தில் இருந்த ராகவாச்சாரி அனாவசிய பேச்சுகளின்றி நிகிதாவிற்கு நிர்வாகத்தை கற்று கொடுத்து உதவியாக இருக்க.. நிகிதாவும் சிரமமின்றி நிர்வாகம் செய்தாள்.

நிகிதாவிற்கு ஏழாம் மாதம் தொடங்கி விட.. வெங்கட் வளைகாப்பு வைக்க வேண்டும் என தனது பெற்றோரிடம் சொல்லி அய்யாவுவிடம் பேச சொல்ல…அய்யாவு மகனை கேட்டு சொல்வதாக சொல்லிவிட்டார்.வீரா வரவேண்டும் என்ற கவலை அவருக்கு.. இதுவரை எப்படியோ.. வளைகாப்பிற்கு கட்டாயம் வந்தாக வேண்டும். இல்லை என்றால் இதை கொண்டு உறவுகளின் பேச்சும்.. அதனால் ஏற்படும் மனகசப்பும்.. மருமகளை தான் பாதிக்கும் என கவலை கொண்டார்.

வெகு நாட்களுக்கு பிறகு அய்யாவு மகனை அழைக்க.. தந்தையின் அழைப்பை பார்த்தவனுக்கு ஆனந்தமாகவும்… நிம்மதியாகவும்.. கண்கள் கலங்கி கரகரப்பான குரலில்…

“அப்பா..”

அவருக்கும் வெகு நாட்களுக்கு பிறகு மகனின் குரலை கேட்டதும்.. ஒருமாதிரி தொண்டையை அடைக்க.. செருமிக் கொண்டு..

“நல்லா இருக்கயா ய்யா..”

“நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கறிங்க..”

“ம்ம் ஏதோ இருக்கேன்..” என்றார் சலிப்பான குரலில்..

அவரின் பேச்சு அவனுக்கு வலியை கொடுத்தாலும்.. அவன் அவரிடம் அதை பற்றி பேசவில்லை. பேச்சை மாற்றும் விதமாக..

“சொல்லுங்கப்பா..” என்றான்.

இவரும் “நிகிதாவுக்கு வளைகாப்பு வைக்கனும்னு உன் மாமா சொல்றான்.. அதான் உனக்கு எப்படி வசதிபடும் என கேட்க தான் கூப்பிட்டேன்..”

“இந்த மாத கடைசி வாரம் வைங்க நான் வந்திடறேன்.” என்றான். அதற்குள் தன் வேலையை முழுவதுமாக முடித்து கொடுத்து விட்டு நிரந்தரமாக ஊர் திரும்பி விட நினைத்தான்.

மகனின் வார்த்தையில் அவரின் அலைப்புற்ற மனம் அமைதி கொண்டது.

“சரிய்யா.. நல்ல நாள் பார்த்து விட்டு சொல்லறேன்”.

அய்யாவு நல்லநாள் பார்க்க.. ஜோதிடர் குறித்து கொடுத்த நாள் தமிழ் மாத கணக்குபடி இறுதியில் வர… ஆனால் ஆங்கில மாத கணக்கிற்கு இரண்டாவது வாரமாக அமைய.. அய்யாவு வீராவிடம் சொல்ல.. வீராவுக்கு அதற்குள் வேலையை முடிக்க முடியுமா என்ற கவலை வந்தது.

ஆனால் இது எதுவும் நிகிதாவுக்கு தெரியாது. அய்யாவு விசாலாவிடமும் நிகிதாவிடமும் நாள் பார்த்தது… வீராவிடம் பேசியது.. என அனைத்தும் சொல்ல.. நிகிதா வேண்டாம் என மறுத்தாள்.

நிகிதா “இப்ப வேண்டாம் மாமா.. ஒன்பதுல வச்சுக்கலாம்.. ”

“ஏன்மா.. அதான் வீரா வந்திடறேனு சொல்லி இருக்கான்ல..”

“அப்படி எதுக்கு அவசரமா வைக்கனும்.. அவருக்கு ப்ரஷர் கொடுத்து டென்ஷன் பண்ண வேண்டாமே.. மாமா முடிச்சிட்டு வந்த பிறகு பார்த்துக்கலாம்..”

“இல்லமா.. வீராவ கேட்டுட்டு தான் செய்யறேன்.என்ன அவன் சொன்ன நாளைக்கு கொஞ்சம் முன்னாடி வருது.. அவனும் சரினுட்டான்..”

“அதுவும் இல்லாம இப்ப தான் பேக்டரிய ஆரம்பிச்சு இருக்கோம்.. இன்னும் அங்க ப்ராப்பரா எதுவும் நடக்க கொஞ்ச நாளாகும். இப்ப எப்படி விட்டுட்டு நான் சென்னை போக முடியும்”

“அதுக்கு வெங்கட் ஏதாவது செய்திருப்பான் மா.. இல்லைனா அவன் வளைகாப்பு பத்தி பேசமாட்டான். அவன்கிட்ட கேட்டுக்கலாம். அதுக்காக செய்ய வேண்டிய விசேசத்தை தள்ளி போட முடியாதுமா..” என்றவர் நிகிதாவை என்ன என்னவோ சொல்லி சமாதானம் செய்துவிட்டார்.

அப்பவும் நிகிதா முகம் தெளியவில்லை. பேக்டரிய பத்தி தந்தையிடம் கேட்க வேண்டும் என நினைத்து கொண்டாள்.

அன்று இரவு வீராவிடமும் நிகிதா இதையே சொல்ல…

“அமுல் பேபி நான்எப்படியும் வந்துடுவேன்.. உன் வளைகாப்புக்கு இருப்பேன். நான் இல்லாம நடக்காது”

“வந்திடுவிங்க தான..”

“கண்டிப்பா வந்திடுவேன்”

“அதுக்குள்ள நீங்க ரீலிவ் ஆகிடுவிங்களா..”

“அதுக்கு தான் டே அண்ட் நைட்டா ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்”

“இப்படி ஒர்க் பண்ணா ஹெல்த் ப்ராப்ளம் வராதா..”என கவலை கொண்டாள்.

“நான் பார்த்துக்கறேன்… வந்து உன்னோடு ரெஸ்ட் எடுத்துக்கறேன்..”

“கண்டிப்பா வந்திடுவிங்க தானே.. நீங்க வரலைனா நான் நிறுத்திடுவேன்”

“ஏய். அப்படி எல்லாம் ஆகாதுடி.. நான் முதல் நாளே வந்திடுவேன். மாமன நம்புடி மில்கி..”

“நம்ப தான் செய்யறேன். ஆனா எப்பவும் நீங்க தான் ஏமாத்திடறிங்க..”

“சாரி அமுல் பேபி.. இந்த டைம் நான் சொன்னத காப்பாத்திடுவேன் நம்புடி..”

“ம்ம்ம்… நீங்க சொல்லறிங்க… கேட்கறேன்..” என்றாள் இழுவையாக.. அவளை சொல்லில் நம்ப வைப்பது கஷ்டம் செயலால் தான் முடியும் என நினைத்து கொண்டான்.

வீரா சொன்னதையும்.. நாள் குறித்ததையும் அய்யாவு வெங்கட்டிடம் சொல்ல… மேற்கொண்டு பேச வெங்கட் குடும்பத்துடன் அடுத்த நாளே வந்தார்.

எப்பவும் போல வளைகாப்பையும் ஆடம்பரமாக செய்ய வெங்கட் திட்டமிட.. அவர் அதை பற்றி சொல்லும் போது தன் மகளுக்கு தன் பேர குழந்தைக்கு செய்யும் ஆர்வமே தென்பட.. யாருக்கும் மறுக்கும் எண்ணம் வரவில்லை.

நிகிதா தான் “ப்பா.. நைன் மந்த்ல வச்சுக்கலாமே.. ” என்க..

வெங்கட்டின் முகம் வாடிவிட … மகனின் முக வாட்டம் பொறுக்காத பாட்டி தான்..

“ஏன் நிகிதா.. அப்படி சொல்ற.. இப்ப வச்சா என்ன..”

“இல்ல கீரேனீ.. மாமா வந்த பிறகு வச்சிக்கலாமே…”

“அவன் தான் வரேனு சொல்லிட்டான்ல என் பேரன் வந்திடுவான்..”

“பேக்டரி இப்ப தான் மூவ் ஆகுது.. அதையும் பார்க்கனும் நான் சென்னை எப்படி வர முடியும்..”

“வீரா வந்திடுவான்.. நான் இருக்கேன் பார்த்துக்கலாம்.. நாமளே இல்லைனாலும் ராகவாச்சாரி பார்த்துக்குவார். அப்படி உனக்கு வேணும்னா வந்து கொஞ்ச நேரம் இருந்து பார்த்துட்டு வரலாம்.. நான் யோசிக்காமயா இதை எல்லாம் செய்வேன்” வெங்கட் சொல்ல.. வேற வழியின்றி அமைதியாக ஒத்து கொண்டாள்.

அடுத்தடுத்து வளைகாப்பிகற்கான வேலைகள் துரிதமாக நடக்க… வீராவுக்கு வேலையை முடித்து கொடுக்கும் நெருக்கடி அதிகமானது. தூக்கம் தொலைத்து வேலை பார்க்க வேண்டிய சூழல் ஒரு புறம்…

தினமும் நிகிதா அவனிடம் கேட்கும் கேள்வி “வந்திடுவிங்க தான..” அவளுடைய நம்பிக்கை இல்லாத கேள்வி ஒரு புறம் அழுத்த.. ரொம்பவே சோர்ந்து போனான்.

வளைகாப்பிற்கு இரண்டு நாட்கள் முன்பே நிகிதாவிடம் சென்றுவிட வேண்டும் என நினைத்து வேலை செய்தவனால் வளைகாப்புக்கு முந்தின இரவு தான் வேலையை முடிக்க முடிந்தது.

அதற்கும் ஒரு வருட கான்ட்ராக்டில் இன்னும் நான்கு மாதம் இருக்க.. என்ன தான் ஏற்று கொண்ட ப்ராஜெக்டை முடித்து கொடுத்த போதும்.. அவன் ஊதியத்தில் முப்பது சதவிதத்தை லாஸ்ஆப் பேவாக இழக்க வேண்டி இருந்தது. அவன் அதை எல்லாம் கூட பெரிதாக நினைக்கவில்லை.

வளைகாப்பு அன்று காலையில் தான் விமானமே ஏறினான். வர தாமதமாகும் என்பதை யாரிடமும் சொல்லவும் இல்லை. விமானம் ஏறும் முன்பு தான் தனது தந்தைக்கும் தாத்தாவிற்கும் அழைத்து சொன்னான். நிகிதாவிடம் சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டான்.

வெங்கட் குடும்பம் முன்தினமே வீரா வீட்டிற்கு வந்து விட்டனர்.காஞ்சிபுரத்தில் பெரிய மண்டபம் பார்த்து சமையலுக்கு சிறந்த கேட்டரிங்.. ஸ்டேஜ் அலங்காரம்… வரும் விருந்தினர்களுக்கு வளையல் வெற்றில பாக்குடன் ஸ்வீட் வைத்த எவர்சில்வர் டப்பா அடங்கிய கிப்ட் பேக் என எல்லாவற்றையும் சிறப்பாக செய்திருந்தார் வெங்கட்.

காலையில் எழுந்ததும் வீராஇன்னும் வரவில்லை என அவனின் எண்ணிற்கு தொடர்பு கொள்ள.. அது சுவிட்ச்ஆப்னு வர.. நிகிதா மனம் சோர்ந்து போனாள். எதிலும் ஒரு ஆர்வம் இல்லாமல் இருக்க.. வீட்டினர் தான் வீரா வந்துவிடுவான் என சொல்லி தேற்றி கொண்டு இருந்தனர்.

மங்களம் பாட்டி தான் வழக்கம் போல் நிகிதாவை உருட்டி மிரட்டி கொண்டு இருந்தார்.

“போ நிகிதா.. போய் குளிச்சிட்டு வா.. நல்ல நேரத்தில் மண்டபத்திற்கு கிளம்பனும்”

நிகிதா குளித்து வரவும் அய்யாவு அவள் கையில் ஒரு பட்டு புடவை கொடுத்து கட்டிக் கொள்ள சொன்னார்.

நல்ல ஆலிவ் பச்சையில் செல்ப் பார்டர் வைத்து.. பார்டரில் சின்ன குழந்தை பிறந்து நடை பயிலும் வரை படங்களாக இருக்க நடு நடுவே வீரா நிகிதா பேரும் முந்தானையில் நிகிதா ஒரு குழந்தையை கையில் ஏந்தி இருக்க.. வீரா நிகிதாவையும் குழந்தையையும் அணைத்தாற் போன்ற படம் சரிகை வேலைப்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் வீராவின் நிகிதாவின் படம் தத்துரூபமாக நெய்யப்பட்டு இருந்தது.

புடவையை வீட்டினர் ஆச்சரியமாக விரித்து பார்த்தனர். நிகிதாவிற்கே ஆச்சரியம் தான். அவர்கள் பட்டறைக்கு டிசைனர் அவள் தான். அவள் செய்து கொடுக்கவில்லை. அய்யாவுவிடம் அதை கேட்கவும் செய்தாள்.

“மாமா இது யார் டிசைன் பண்ணியது.. நம்ம தறியில் தயாரனதா..”

“என் மகன் உனக்கு கொடுத்த பரிசு..அவன் ப்ரண்ட்கிட்ட இப்படி டிசைன் பண்ணி தர சொல்லி.. என் கையால நானே என் மருமகளுக்கு நெய்த புடவை..”என சொல்ல..

கணவன் மற்றும் மாமனார் அன்பில் நெகிழ்ந்து போனாள். கணவனை மனதிற்குள் செல்லமாக திட்டி கொண்டாள்.

‘கருவாயனுக்குள்ள ஒரு காதல் மன்னன் இருப்பான் போல இருக்கே..பார்டா எப்படி எல்லாம் யோசித்து டிசைன் பண்ணியிருக்கான். ஆனாலும் கருத்த மச்சான் கிரேட் தான்.. ஆனால் மவனே எனக்கு வளையல் போட நீ வரலை.. கதம் கதம் தான்’

அவள் கணவனின் பரிசான சேலையை அழகாக உடுத்தி அதற்கு ஏற்ற நகைகள் அணிந்து தன் மேடிட்ட வயிறை தாங்கி தேர் போல அசைந்து நடந்து வர.. அழகாக இருந்தது. உலக அழகிகள் கூட சூழ் கொண்ட தாயின் அழகிற்கு ஈடில்லை தான்.

மண்டபத்தில் நல்ல நேரத்தில் வளைகாப்பு தொடங்க.. மங்ளம் பாட்டி தான் முதலில் சந்தன நலுங்கிட்டு வளையல் போட்டு அட்சதை போட்டு ஆசிர்வாதம் பண்ணி ஆரம்பித்து வைக்க.. அவரை தொடர்ந்து விசாலா ரோஹிணி பொன்னி.. ஏன் ஆரா கூட அக்காவிற்கு அழகாக வளையல் அணிவித்தது. நிகிதா வீராவின் வருகையை எதிர்பார்த்து வாசலையே பார்த்து கொண்டு இருந்தாள்.

சுமங்கலி பெண்கள் ஆசிர்வதிக்க.. கைநிறைய வளையலுடன் கன்னத்தில் சந்தனம் மினுங்க.. தேவதையாக இருந்த நிகிதாவை அனைவரும் ரசித்தனர். கொண்டவனுக்கோ அந்த கொடுப்பினை வாய்க்கவில்லை.

இதற்கும் தன் சொந்த பந்தங்கள் நட்பு வட்டங்கள் தொழில் துறையை சார்ந்தவர்கள் என அனைவரையும் அழைத்து கோலகலமாக தான் செய்திருந்தார் வெங்கட்.

வளைகாப்பு முடியும் தருவாயில் கூட வீரா வரவில்லை எனவும்.. நிகிதாவின் கண்களில் நீர் நிறைந்து விட … வீட்டினர் அருகில் வந்து அவளை சூழ்ந்து கொண்டு சமாதானம் செய்தனர். மனமே இல்லாமல் அவளுக்காக அவளுக்கு பிடித்த உணவுகள் மெனுவில் இருக்குமாறு வெங்கட் செய்ய சொல்லியிருக்க.. அவள் அதை கூட சரியாக சாப்பிடவில்லை.

அவளின் மனமறிந்து அவளை வற்புறுத்தவில்லை. எல்லாம் நல்லபடியாக முடிந்து சென்னைக்கு காரில் ஏறும் வரை நிகிதா வீராவை எதிர்பார்த்தாள். மனமே இல்லாமல் சென்னை கிளம்பி சென்றாள்.

மனதின் சோர்வு உடலையும் சோர்வாக்க.. போனதும் தன் அறைக்கு சென்று உடை மாற்றி படுத்துவிட்டாள். எப்பொழுதும் வீரா படுக்கும் இடத்தில் அவன் தலையணையில் தலை வைத்து படுத்து கொண்டாள்.

படுத்து கொண்டே கண்களால் அறையை நோட்டம் விட்டவளுக்கு.. தன் கருவாயனோடு தேடல் கொண்டு.. கூடல் கொண்டு.. காதலை சுகித்து.. களிப்பில் கழித்த இராப் பொழுதின் பொல்லா நினைவுகளை அசை போட்டு கொண்டு இருந்தாள்.

ரோஹிணி இரவு உணவை நிகிதாவின் அறைக்கே கொண்டு வர.. சாப்பிட பிடிக்காமல் மறுக்க..

“நிக்கி பேபி.. உனக்காக இல்லாட்டாலும் உன் பேபிக்காக நீ சாப்பிடனும்டா..” ஊட்டி விட தாயின் கையில் உணவு கூட சுவையாக இருக்க.. நன்றாகவே சாப்பிட்டாள்.

அன்றைய விழாவினால் உடல் சோர்ந்து இருக்க.. மனதின் அலைப்புறுதலும் சேர்ந்து கொள்ள.. வயிறு நிறைய கண்களை சுழட்டி கொண்டு வர.. சாப்பிட்டவுடன் உறங்கிவிட்டாள்.

வீரா வரும் போது நல்ல உறக்கத்தில் நிகிதா இருக்க.. நிகிதாவை பார்க்க.. சென்னை வந்து இறங்கியவன் தாமரையூர் செல்லாமல்.. நேராக நிகிதாவிடம் வந்துவிட்டான்.

மேடிட்ட வயிறு சற்றே சரிந்திருக்க.. நிகிதா கால்களை நீட்டி படுத்திருக்க.. அவளுக்கு நேர் எதிரே அவள் கால்பக்கம் கட்டிலின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்.. பாதங்கள் இரண்டையும் தன் இரண்டு உள்ளங்கை கைகளில் ஏந்தியவன் முன் பாதத்தில் இரண்டிலும் முத்தமிட்டான். முத்தத்தோடு இரண்டு சொட்டு கண்ணீரும் கலந்து.. நிகிதாவை சிலிர்க்க வைக்க.. தூக்கம் கலைந்து கண்விழித்து பார்த்தவள் கண் எதிரே வீராவை காணவும்..

“மாமா.. வந்திட்டிங்களா..” என அடித்து பிடித்து எழ.. வீரா பதறி போய்..

“ஏய் அமுல் பேபி.. பார்த்து மெதுவாடி..” என அருகில் சென்று அவளை தாங்கி கொள்ள..

“ஏன் காலையிலேயே வரல..” என அவனை சரமாரியாக அடிக்க.. அத்தனை அடிகளையும் சுகமாக வாங்கி கொண்டான்.அவளின் தொடுவுணர்வை கண்மூடி அனுபவித்தான்.

அடித்து ஓய்ந்து போய் அவன் தோளில் சாய்ந்து அழ.. அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து அணைத்து கொண்டான்.

24 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

என் மோகத் தீயே குளிராதே 29

அத்தியாயம் 29   “விடு டா.. என்னைய இறக்கி விடு.. சொல்ல.. சொல்ல கேட்கமாட்டேங்குற..” என்றவள் அவனிடம் இருந்து திமிற, அவளை பொத்தென மெத்தையில் தூக்கி வீசியவன், அவள் மீதே விழுந்தான்.    “ஆஆஆ.. ஆவுச்.. போடா.. எருமை.. எருமை.. அம்மாஆஆஆ.. வலிக்குதுடா.. இப்படியா மேல விழுவ?”   “அப்படியே வாட்டர் மெட் மாதிரியே இருக்கடி.. பொசு பொசுன்னு.. பஞ்சு மெத்தை தான்டி நீ..”   “ப்ச்.. பேச்சை மாத்தாத.. நீ என்னைய லவ் பண்றேன்னு சொன்னேன்ல?”

என் மோகத் தீயே குளிராதே 29 Read More »

C868BD88-2DA3-4491-8E71-9A70327F3526

23 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

23 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

நிகிதா தன் தந்தை ஏதாவது செய்யலாம் என சொன்னதை நம்பி சும்மா இருக்கவில்லை. காஞ்சிபுரம் சுற்றிலும் தனக்கான பேக்டரியை தேடி தேடி அலைந்தாள். மசக்கை ஒரு புறம் அவளை வாட்டினாலும் மனதின் வைராக்கியம் கொண்டு அதை புறம் தள்ளினாள்.

அவள் எதிர்பார்த்தது ரொம்ப பழைய பேக்டரியாக இருக்ககூடாது. மெஷினரீஸ் பழைய மாடலாகவோ.. இப்பவோ அப்பவோ பழுதாகிவிடும் நிலையிலோ இல்லாமல்.. கொஞ்சம் புதிதாக இம்போர்ட் மெஷினரீஸ் உள்ளதாக இருந்தால் உடனே ரன் செய்ய வசதியாக இருக்கும் என நினைத்து தேடினாள்.

அவளுக்கு அதை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை தான் ஆனால் படித்தவள் தானே நெட்ல நிறைய தேடி தெரிந்து கொண்டாள். தந்தையிடமும் சில மாதங்கள் என்றாலும் பேக்டரியில் வேலை செய்திருந்ததால் வீராவிடமும் சிலதை கேட்டு தெரிந்து கொண்டாள்.

“எப்ப பாரு இதே பேச்சு தானாடி..கடல் கடந்து மாமன் இருக்கானே.. அவன கொஞ்சம் கவனிப்போம்னு நினைக்கறியாடி..”

“நான் ஏன்யா உன்னை கவனிக்கனும்.. உனக்கு தான் கல்யா..ஆஆஆ..ணி இருக்காளே.. கருத்த மச்சானு மினுக்கிக்கிட்டு வருவா..”

“ஏண்டி.. இப்ப எல்லாம் அவள பத்தி நினைக்கறது கூட இல்ல.. நீ தான் சொல்லி ஞாபகம் படுத்தற..”

“ஓஓஓ.. நான் சொன்னா நீங்க நினைப்பிங்களோ..”

“எப்படிடீ .. எந்த பக்கம் போனாலும் விடாம அடிக்கற.. மாமன் பாவம்டி.. என் நினைப்புல உன்னை தவிர யாரும் இல்ல..நான் ஶ்ரீராமன்டி..”

“ம்கூம்.. அப்ப கல்யாணி யாரு.. தங்கச்சியா…”

பேசாமல் இருந்தான். அவனால் கல்யாணி தங்கையாக நினைக்க முடியவில்லை. அவளுடைய கருத்த மச்சான்ற அழைப்பு நினைக்க விடவில்லை. அவனை பொறுத்தவரை தன் மன கஷ்டங்களுக்கு வடிகாலாய் வந்த வரம்பு மீறாத பெண் நட்பு அவ்வளவு தான். அவள் பேச்சை மனதால் ரசித்தான் தான். ரசனை மட்டுமே..அதை அவளிடம் காட்டி கொண்டால் எங்கே உரிமை எடுத்து கொண்டு எல்லை மீறுவாளோ.. என்று காட்டி கொண்டதில்லை. அந்த ரசனை மட்டுமே அவனின் மனதிற்கு மருந்தாக இருந்தது.

“என்ன.. அமைதியா இருக்கிங்க.. அவ சொன்ன மாதிரி லிவ்ன்ல தான் இருக்கறிங்களா..” என்றாள் கோபமாக..

“அம்மா தாயே.. உன் கால்ல வேணாலும் விழுகறேன்.. நான் அவளை நேருக்கு நேர் பார்த்ததில்ல.. சொன்னா நம்புடி..”என்றான் கெஞ்சலாக..

“சரி.. சரி.. அத விடுங்க..”

அப்பாடி என நிம்மதியாக ஆசுவாசமாக.. அடுத்த கேள்வி கேட்டாள்.

“எப்ப வருவிங்க.. வருவிங்களா.. இல்ல அங்கயே இருந்துக்குவிங்களா.. ”

“ஏண்டி… “என்றான் பாவமாக..

“என்ன பதில் சொல்லுங்க..”

“சீக்கிரம் வந்துடுவேன்டி…”

“என்னய பார்க்கவா.. உங்க புள்ளய பார்க்கவா.. யார பார்க்க வருவிங்க…”

“இரண்டு பேரையும் தான்..”

“நானா… உங்க குழந்தையா..”

“அது என்ன என் குழந்தை.. நம்ம குழந்தை..”

“ம்ப்ச்.. நான் கேடடதுக்கு பதில்..”

“உன் கேள்வியே புரியல.. நான் வந்தா இரண்டு பேரையும் தான பார்க்க வருவேன்..”

“இல்ல.. கீரேனீகிட்ட சொன்னிங்களாம்.. கன்சீவ்வா இருக்கேன் தெரிஞ்சிருந்தா.. இங்கயே இருந்து இருப்பேன்னு சொன்னிங்களாம்”

“ஆமாம் சொன்னேன்.. கண்டிப்பா போயிருக்கமாட்டேன்..”

“அப்ப பேபி மேல தான் பாசம்..”

“அப்படி இல்லடி.. அமுல் பேபி..”

“அப்படி தான்.. இப்பவும் உங்க பேபிக்காக தான் திரும்ப வர பார்க்கறிங்க..அதனால தான் கேட்டேன். என்னய பார்க்கவா.. பேபிய பார்க்க வரிங்களானு கேட்டேன்”

ஐயோ கல்யாணமானவன் பூரா ஏன் மந்திரிச்சு விட்ட கோழி மாறியே சுத்தறானுங்கனு இப்ப தானே புரியுது…வீராவின் மைண்ட் வாய்ஸ்

“சத்தியமா புரியல.. நீ என்ன நினைக்கறியோ.. அத தெளிவா சொல்லு..”

“நீங்க டெலிவரிக்கு முன்னாடி வந்தா என்னைய பார்க்க.. டெலிவரிக்கு அப்புறம் வந்தா உங்க பேபி மேல தான் உங்களுக்கு அஃபெக்க்ஷன்.. என் மேல இல்லை..”

“ஏய்.. நிகிதா.. அப்படி எல்லாம் இல்லடி..”

“சொல்லாதிங்க.. செய்ங்க..” என கட் பண்ணிவிட்டாள்.

எப்படி எல்லாம் யோசித்து வளைச்சு வளைச்சு கேட்கறா.. அதான் பொண்டாட்டி போன் வந்தா எல்லா பயலுகளும் அலறானுங்களா.. ஷ்ஷப்பா.. என டயர்டாகி தூங்கிவிட்டான்.

அவள் நினைத்தது போலவே ஒரு பேக்டரி அமைந்தது. நான்கு பார்ட்னர்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்குள் சுமுகமான நிலை நீடிக்காததால் விற்று அவர்கள் பங்கை எடுத்து கொள்ளும் நிலையில் இருக்க.. தெரிந்தவுடன் தன் தந்தையை அழைத்து கொண்டு சென்று பார்த்தாள்.

மகளின் தீவிரம் கண்டு வெங்கட்டும் வந்து பார்த்தார். அவருக்கும் பிடித்து போக .. நிகிதா பெயரில் வாங்க சட்டரீதியான வேலைகளை ஆரம்பித்தார். அதற்கு பிறகு தேங்காமல் எல்லா வேலைகளும் துரிதமாக நடந்தது.நிகிதாவும் தேங்கவில்லை. பேக்டரி வேலைகளையும் தேங்கவிடவில்லை.

அவளின் வேகம் கண்டு வீராவும் குடும்பத்தினரும் பயந்து போயினர். வயிற்றில் பிள்ளையை வைத்து கொண்டு இப்படி அலைகிறாளே.. குழந்தைக்கு ஏதாவது ஆகவிடுமா என..

நிகிதா ஒவ்வொரு தடவையும் வண்டியில் வெளியே சென்று வீடு திரும்பும் வரை விசாலா வாசலையே பார்த்து கொண்டு இருப்பார்.

“நிகிதா கண்ணு.. ஒரு ஐந்து மாதம் முடிஞ்ச பிறகு வண்டிய எடுக்கலாம்ல.. கொஞ்சம் கூட ஓய்வே இல்லாம அலைஞ்சு என்னாவது ஆயிடுச்சுனா.. வேணாங்கண்ணு வீரா வந்து கூட இது எல்லாம் பார்க்கட்டும்”என்றார். இதை நிகிதாவிடம் சொல்ல கூட அவருக்கு பயம் தான். அவளின் பிடிவாதம் தெரிந்தது தானே..

“அத்தை.. அது என் பிள்ள.. அது எனக்கு எந்த கஷ்டமும் கொடுக்காது. அது என்னைவிட ஸ்ட்ராங்..” என்றிட அதற்கு மேல் அவரும் தான் என்ன பேசுவார்.

காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் கைராசியான மருத்துவர் என்று பெயர் வாங்கிய பெண் மருத்துவர் ஒருவரை..ரோஹிணி விசாரித்து சொல்ல.. நிகிதாவை கூட்டி கொண்டு மங்களம் பாட்டி ரோஹிணி விசாலா பொன்னி பெண்கள் படையே சென்றது.

மூன்று மாதங்கள் முடிந்து நான்காம் மாதம் தொடக்கம்.. அதுவரை உள்ளூரில் ஆரம்ப சுகாதார மையத்தில் தான் பார்க்க கொண்டு இருந்தாள். அன்றே அவளுக்கு ஸ்கேன் செய்து குழந்தை நல்ல வளர்ச்சியுடன் இருப்பதாக சொல்லவும் தான் பெண்கள் மனதில் நிம்மதி..

தனது குழந்தையை திரையில் பார்க்க பார்க்க… அப்படி ஒரு ஆனந்தம்.. தன்னில் ஒரு உயிர்.. தன்னால் உருவாக்கப்பட்ட உயிர்.. தன்னையே உருவாக்கிய உயிர்… உலகமே போற்றும் தாய் என்ற ஸ்தானத்தை தனக்கு கொடுத்த உயிர்.. அதை திரையில் பார்த்தவளுக்கோ ஆனந்தத்தில் உதட்டில் உறைந்த சிரிப்போடு கண்களில் நீர் வடிய..

இந்த சந்தோஷம் தன் கணவனுக்கு வாய்க்கவில்லை என நினைத்து வருத்தம் கொண்டாள். உடனே ஒரு யோசனை..

“இதை எனக்கு வீடியோவாக பெண்டிரைவ்ல காப்பி பண்ணி தர முடியுமா” என மருத்துவரிடம் கேட்டாள்.

அவரும் சரி என்க.. தான் எப்போதும் வைத்திருக்கும் பெண்டிரைவ்வை கொடுத்து காப்பி பண்ணி வாங்கி கொண்டாள்.

அன்று இரவே வீராவுக்கு அதை வீடியோவாக வாட்சப்பில் அனுப்பினாள்.
அனுப்பி விட்டு ஆர்வத்தோடு போனையே பார்த்து கொண்டு இருந்தாள்.

ஒரு வெள்ளைடிக்…

இரண்டு வெள்ளை டிக்..

இரண்டு புளூ டிக்..

“சீக்கிரம் பாருங்க மாமா.. நம்ம பாப்பா க்யூட்டா இருக்குது..” என போனை பார்த்து கொண்டு அவன் அழைக்கும் நொடிக்காக பரபரப்பாக காத்து கொண்டு இருக்க…

போனை முதல் ரிங்கிலேயே எடுத்தவள்..

“மாமா..”

“அமுல்பேபி..” இருவரும் ஒரே நேரத்தில்..

“நம்ம பாப்பாடி..”

“ஆமாம் மாமா.. நம்ம பாப்பா..”

“இரு வீடியோ கால் வரேன்..”

இருவரின் முகத்திலும் உலகை வென்றிட்ட ஆனந்தம்.. பின்னே இருக்காதா.. தாங்கள் இருவரும் சேர்ந்து படைத்த உயிரின் உயிரோட்டம் கண்ட உவகை..

“அமுல் பேபி உன் வயிற்றை காமிடி..”

லேசாக புடவையை விலக்கி காண்பிக்க..

“நல்லா காமிடி..”

கூச்சத்துடன் மெதுவாக விலக்கி முழுவதும் காண்பிக்க.. அங்கே தெரிந்த பால் நிற வயிறை தொட்டு தடவி தன் சிசுவின் ஸ்பரிசம் உணர ஆசை.. ஆசை நிறைவேறாத தன் நிலையை எண்ணி கோபம் கொண்டு தன் கட்டிலின் சட்டத்தில் ஓங்கி தன் கையை அடிக்க..

“மாமா.. வேண்டாம்..”

“ச்சை.. நான் பாவிடி.” என்றான் கசங்கிய முகமாக..

அவனை மாற்றும் விதமாக “மாமா.. உங்க பேபி எப்படி மூவ் பண்ணுது பார்த்திங்களா.. ரொம்ப துறுதுறுனு இருக்குல்ல.. ஆனா மாமா ஒன்னு வேணா நிச்சயம்.. உங்க புள்ள பாஸ்ட் மூவ் தான்.. நீங்க கனடாவுக்கு தான ஓடி போனிங்க.. உங்க பேபி ஸ்பேஷ்கு ஓடிடும்”என சொல்லி கலகல என சிரிக்க..

“ஆனா ஒன்னுடி .. கேப் கிடைக்கும் போது எல்லாம் கிடா வெட்டறிடி..” என்றவன் முகம் மாறியிருக்க.. அதை ஆசையோடு பார்த்திருந்தாள்.

அவளின் பார்வை கண்டு “என்னடி மாமன சைட் அடிக்கறியா..”

“ஏன் நான் அடிக்க கூடாதா.. அந்த கல்யாணிக்கு தான் ரைட்ஸ் இருக்கா…”

“ஆஹா.. நிகிதா பேக் டூ பார்ம்.. இனி உன்கிட்ட பேசினா நல்லா வச்சு செய்வ.. சாப்பிட்டயா.. தூங்கு.. ” என போனை வைத்துவிட்டான்.

“கருத்த மச்சான்.. சும்மா கிலி தாங்கி இருக்கானே… நிகிதா இது கூட நல்லா தான் இருக்கு”

இரவில் வீராவிடம் தினமும் பேசிவிடுவாள். அதுவும் வீரா வீடியோ காலில்… அவள் முகம் பார்த்து பேசினால் தான் அவனுக்கு அன்றைய இரவு நிம்மதியான உறக்கம் வரும்.

அதுவும் அவள் அன்று செய்த வேலைகளை பேசும் போது அவள் கண்களில் தெரியும் ஆர்வம் அவளின் ஈடுபாட்டை சொல்லும்.. அவள் முதலில் வீராவுக்காக ஒரு தொழில் என தான் நினைத்து செய்தாள்.ஆனால் அதில் இறங்க இறங்க.. அவளுக்கே அதில் ஒரு பிடிப்பும் வேகமும் வந்துவிட்டது..

பணம் புகழ் மட்டும் தான் போதை தருமா.. தொழிலை நேசித்து அடுத்து என்ன என தேடுவதும் ஒரு போதை தான். அவளின் பேச்சு வீராவுக்கே ஒரு பயத்தை கொடுத்தது. சீக்கிரம் ஊர் திரும்பி விடும் வேகத்தை அதிகப்படுத்தியது.

தன் வேலையோடு அய்யாவுவின் பட்டறை வேலையையும் வேகமாக முடித்தாள். சிமெண்ட் அட்டை வேய்ந்த கட்டிடமாக இருந்ததை கான்க்ரீட் கட்டிடமாக கட்டி.. கட்டிடங்களை சுற்றி வேம்பு புங்கை பூவரசு மரங்கன்றுகளை வைத்து இருந்தாள். பார்க்கவே பசுமையாக இருந்தது.

கம்யூட்டரில் டிசைன் செய்த அட்டைகளை கொண்டு மோட்டார் உதவியுடன் முப்பது தறிகளை தயார் செய்தாள்.

பட்டறையில் வேலை செய்வோருக்குகுடிநீர் டாய்லெட் என அடிப்படை வசதி என அனைத்தும் செய்திருந்தாள்.

அதற்கு திறப்புவிழா வீரா வந்த பிறகு வைத்து கொள்ளலாம் என அய்யாவு சொல்ல.. வீரா தான் வரும் வரை காத்திருக்க வேண்டாம் என சொல்லி விட..

இதோ ஒரு நல்ல நாளில் அய்யாவும் விசாலாவும் மனையில் அமர்ந்திருக்க.. ஹோமம் வளர்த்து பூஜை செய்து.. சொக்கலிங்கம் மங்களம் தம்பதியராக ஆசிர்வாதம் செய்து முதல் தறியை இயக்கி வைத்தனர்.

நிகிதாவால் உருவாக்கப்பட்ட டிசைனில் எல்லா தறிகளையும் ஆட்கள் இயக்க.. சாப்ட் சில்க் புடவையில் ஐந்து மாதம் ஆன… லேசாக மேடிட்ட வயிற்றில் தனது இடதுகையை வைத்து மெதுவாக நடந்து ஒவ்வொரு தறியிலும் தான் வடிவமைத்த டிசைன்கள் புடவையாக நெய்யப்படுவதை பார்த்து ரசித்து பூரித்து போனாள்.

ஆரா இதை எல்லாம் லைவ்வாக வீடியோ காலில் வீராவிற்கு காண்பித்து கொண்டு இருந்தாள். தன் மனைவியின் முயற்சியிலும் உழைப்பிலும் மிளிர்ந்த தறிபட்டறையை ஆசையாக பார்த்து கொண்டு இருந்தான். தான் உருவாக்கியதை ரசித்து கொண்டு இருந்த மனைவியை பார்த்தவன் ஆராவிடம் நிகிதாவிடம் கொடுத்து பேச சொல்ல..

“அக்கா.. இந்தா மாமா..” கொடுத்து விட்டு ஓடிவிட்டாள்.

“சொல்லுங்க மாமா..”

“பங்ஷன் நல்லபடியா முடிஞ்சுதா..”

“ம்ம் இப்ப தான் முடிஞ்சுது.. தறி ஓடிட்டு இருக்கு மாமா..”

“பார்த்தேன்.. நான் சம்பாதிச்சுட்டு வந்து செய்யனும் நினைச்சதை நீ அங்கேயே இருந்து சாதிச்சட்டடி.. உன்னை நினைச்சா பெருமையா இருக்கு..”

“பார்ரா.. மாமா என்னை புகழ எல்லாம் செய்யறாரு..” என்று கிண்டல் செய்ய..

அவளை அப்படி ரசித்து பார்த்து கொண்டு இருந்தான். இள மஞ்சள் வண்ண சாப்ட் சில்க் புடவை.. கழுத்தில் ஒரு சின்ன ஆரம்.. தலைமுடியை சிறு பின்னலாக பின்னி.. இரண்டு புறமும் தோளில் உரசிக்கொண்டு இருந்த மல்லிகை சரத்தோடு.. நெற்றி வகிட்டில் குங்குமத்தோடு.. பூஜையில் கொடுத்த விபூதி சந்தனம் தீற்றலோடு இருந்தவளின் முகத்தை பார்த்தவன்.. பார்த்து கொண்டே இருக்க…

அப்படி ஒரு பார்வை.. அவன் காதலின் தேடலுக்கான பார்வை.. அவன் மட்டுமே பார்க்க கூடிய உரிமை பார்வை.. பார்க்க மட்டுமே முடியும் என்ற ஏக்கப் பார்வை..

அவனின் பார்வை லேசராக அவளை ஊடுருவி மின்சார அதிர்வை அவள் உடலில் ஏற்படுத்த… அதை தாங்க இயலாமல்..

“மாமா..”என முகத்தை அழகாக சுழித்து சிணுங்கினாள்.

அவள் சிணுங்கல் மொழியும்… வெட்கத்தில் சிவந்திருந்த முகமும்.. அவன் அவளை அணைத்து ஆலிங்கனம் செய்திட வீறு கொண்டான். அவளின் பின்கழுத்து வளைவிலும் காதுமடலின் பின்புறம் உள்ள பூனை முடிகளில் மீசை உரச குட்டி குட்டி முத்தம் இட்டு… அவனின் மில்கி சிலிர்த்து மயங்கி கிறங்கி சொக்கி நிற்கும் அழகை ரசித்து காதல் கொள்ள அருகில் இல்லாமல் போனோமோ என தவித்து போனான்.

23 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

error: Content is protected !!
Scroll to Top